மட்டு. வாகரையில் காணாமல்போன 4 சிறுமிகள் மீட்பு ; 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைது

Published By: Digital Desk 3

12 Aug, 2023 | 08:23 PM
image

மட்டக்களப்பு வாகரையில் கடந்த வியாழக்கிழமை (10) பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து, காணாமல்போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11) பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

அத்தோடு, இது தொடர்பில் 17 வயதான இரண்டு சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய 4 சிறுமிகள் கடந்த வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (11) வாழைச்சேனை சுங்காங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 4 சிறுமிகளை மீட்டதுடன் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்தனர்.

குறித்த சிறுமிகள் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் 8ம் தரத்தில் கல்வி கற்றுவரும்  நிலையில்,  சம்பவதினமான வியாழக்கிழமை அந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெறும் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக பெற்றோரிடம் தலா ஒவ்வொருவரும் 300 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு அன்றைய தினம் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, பாடசாலை  சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிகள் வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து பஸ்வண்டியில் ஏறி பாசிக்குடா சென்று கடலில் நீராடிய நிலையில், அங்கு நீராடிய சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 மற்றும் 16 வயது சிறுவர்களுடன் இரு சிறுமிகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இதனையடுத்து இரவாகியதால் சிறுமிகள் வீடு செல்ல பஸ்வண்டி இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு காலையில் போகுமாறு காதலன்கள்  சிறுமிகளை கோரியதையடுத்து 4 சிறுமிகளும் காதலன் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-13 06:05:42
news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55