மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியில் உள்ள பஸ் தரிப்பிட கட்டடத்தில் ஆணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கட்டடத்தில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஆணொருவர் சடலமாக கிடப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் உயிரிழந்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும், இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள பொது கட்டடங்களான சந்தை மற்றும் பஸ் தரிப்பிட கட்டடங்களில் தங்கி வாழ்ந்து வந்ததாகவும் அவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM