ஆரோக்கியத்திற்கு ஆணி வேராக திகழும் சர்காடியன் ரிதம்

12 Aug, 2023 | 03:06 PM
image

டொக்டர் ஸ்ரீதேவி தொகுப்பு அனுஷா

எம்மில் பலருக்கும் இதயத்துடிப்பு என்பது குறித்து அறிந்திருப்பர். சிலர் பயாலஜிக்கல் க்ளாக் எனப்படும் உயிரியல் கடிகாரம் குறித்தும் அறிந்திருப்பர். ஆனால் உயிரியல் கடிகாரத்துடன் இணைந்து அறியப்பட வேண்டிய சர்காடியன் ரிதம் எனப்படும் சர்காடியன் இசைவு என்பதை குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் தெற்காசிய நாட்டினர் 60 சதவீதத்தினருக்கும் மேல் நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்த பாதிப்பு, இதய நோய், உடற்பருமன், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், குடல் அழற்சி, ஒவ்வாமை, கண் நோய், குழந்தையின்மை, மன நோய் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

'நோய் நாடி நோய் முதல் நாடி..' எனும் வள்ளுவர் குறளுக்கு ஏற்ப, இந்த நோய்கள் ஏற்பட்டதன் மூல காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் தான் இதற்கு காரணம். அதாவது எம்முடைய உடலில் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயிரியல் கடிகாரமும், அதற்கு இணையாக செயல்படும் சர்காடியன் ரிதம் எனப்படும் இசைவுகளும் பாதிக்கப்பட்டிருப்பது தான் முதன்மையான காரணம்.

நாம் உறங்குவது குறித்தும், விழிப்பது குறித்தும் சரியான முறையில் எடுத்துரைப்பது எம்முடைய உடலில் இருக்கும் சர்காடியன் ரிதம்.  இவை பாதிக்கப்படும்போது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களுக்கு முகம் கொடுக்கிறோம்.

எம்முடைய உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களுக்கு ஊட்டம் அளிப்பது மெலடோனின் எனப்படும் ஹோர்மோன். இந்த மெலடோனின் எம்முடைய மூளையில் உள்ள பீனியல் சுரப்பி எனப்படும் சுரப்பியில் சுரக்கும் முக்கியமான ஹோர்மோனாகும். இந்த ஹோர்மோன் சுரப்பிற்கும், எம்முடைய உறக்கத்திற்கும் ஆழமான தொடர்பு உண்டு.

இந்த மெலடோனின் சூரிய வெளிச்சத்தில் மிகக் குறைவாகவும், சூரியன் மறைவுக்குப் பின்னர் ஏற்படும் இருளில் அதிகமாகவும் சுரந்து, மனிதனின் தூக்கத்தையும்... அதனுடாக அவனின் ஆரோக்கியத்தையும் சீராக பராமரித்து பேணுகிறது. ஆனால் நாம் மெலடோனின் அதிகம் சுரக்கும் இரவில் உறங்காமல் விழித்திருந்து பணியாற்றுவதால், எம்முடைய உயிரியல் கடிகார சுழற்சியும் சர்காடியன் ரித சுழற்சியும் மாற்றமடைந்து உடல் பாரிய பாதிப்புக்கு ஆளாகிறது.‌

மனிதனின் சுகவீனத்திற்கு முதன்மையான காரணம் தூக்கமின்மை தான் என மருத்துவர் நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். மேலும் தற்போதைய வளர்ச்சி அடைந்த தொழில் நுட்ப உலகத்தில் வாழும் மக்கள் இரவு நேரத்தில் தொலைக்காட்சி, கணினி, கைபேசி ஆகியவற்றை நெடுநேரம் பாவிப்பதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது.

எம்முடைய உடலில் இயல்பாக அமைந்திருக்கும் சர்காடியன் ரிதம், பிரைய்ன் வேவ் ஆக்டிவிட்டி, ஹோர்மோன் சுரப்பு, புதிய செல் உற்பத்தி, உயிரியல் செயல்பாடுகள்  ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.  நாம் தவறான வாழ்க்கை நடைமுறையை பின் தொடர்வதால், இவற்றில் பாரிய பின்னடைவு ஏற்பட்டு ஆரோக்கிய கேட்டிற்கு ஆளாகிறோம். அத்துடன் பி எம் ஆர் எனப்படும் வளர்ச்சிதை மாற்ற விகிதத்திலும் சமச்சீரற்றதன்மை உண்டாகிறது.

இதனால் கடந்த தசாப்தங்களில் 70 வயதுகளுக்கு மேல் ஏற்பட்ட உடல் சுகவீனங்கள், தற்போது 40 வயதுக்குள்ளாகவே ஏற்படத் தொடங்குகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் எம்முடைய உயிரியல் கடிகாரம் மற்றும் சர்காடியன் ரிதம் ஆகியவற்றை இயல்பாக இயங்க வைப்போம். அதற்காக எம்முடைய முன்னோர்கள் வழிகாட்டிய வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுவோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை பயன்படுத்தியும், இரவில் உறங்கி.. அதிகாலையில் எழுந்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43