'கிராமத்து நாயகன்' சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நா நா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'சலீம்', 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என். வி. நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நா நா'. இதில் சசிகுமார், சரத்குமார், பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், பிரதீப் ராவத், டெல்லி கணேஷ், ரமா, ஹரிப்பிரியா, ஜெயந்தி, பாண்டி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கே. ராம் மோகன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டிற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டத்தில் சசிகுமார்- சரத்குமார் இடையிலான எக்சன் காட்சிகள் பரபரப்பாக இருப்பதால் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.
விரைவில் இந்தத் திரைப்படம் வெளியாக கூடும் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM