இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் செப்டெம்பரில்

11 Aug, 2023 | 05:30 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கால்பந்தாட்ட உத்தியோகபூர்வ தேர்தலை, 2022 டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட விதிமுறைகளின் கீழ் நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதி வழங்கியிருந்தார். 2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இலங்கைக்கு அளித்து, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான உத்தியோகபூர்வ தேர்தல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மற்றும் பீபா ஆகியவற்றின் மேற்பார்வையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA தடை விதித்திருந்தது. கால்பந்தாட்ட உத்தியோகத்தர்கள் தெரிவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றச்சாட்டுக்களை கருத்திற்கொண்டு மூன்றாம் தரப்பினரின் தலையீட்டின் கீழ் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டத்திற்கு அமைய செயற்படாததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 12  ஆம் திகதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, 2026 FIFA உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க FIFA மற்றும் AFC தீர்மானிதுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில்...

2026-04-13 22:26:01
news-image

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில்...

2026-04-13 16:00:02
news-image

உசைன் போல்ட் சாதனை முறியடிப்பு: 18...

2026-04-13 13:33:42
news-image

மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் றோயல்...

2026-04-13 01:52:00
news-image

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை சகலதுறைகளிலும் விஞ்சிய...

2026-04-12 21:56:11
news-image

20இன் கீழ் பெண்களுக்கான 10 கி.மீ. ...

2026-04-12 20:00:19
news-image

நடப்பு ஐபிஎல் அத்தியாயத்தில் சஞ்சு செம்சன்...

2026-04-12 00:43:44
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி 3ஆவது வெற்றியை...

2026-04-11 23:46:46
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடான ஒருநாள் தொடரை ...

2026-04-11 23:37:22
news-image

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு 3ஆவது நேரடி...

2026-04-11 00:50:58