சபாநாயகரின் அறிவிப்பு பாரதூரமானதுடன் தவறான எடுத்துக்காட்டு - அனுர குமார கடும் விசனம்

11 Aug, 2023 | 05:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த தினத்தன்று,  பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை எந்த நீதிமன்றத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாது, அதிகாரமில்லை என சபாநாயகர் விடுத்த அறிவிப்பு முற்றிலும் தவறானதுடன்  அரசியலமைப்பு மீறலாகும்.

கடன் மறுசீரமைப்பு யோசனையை தவிர சட்டமூலமல்ல, அரசாங்கத்தின் யோசனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்றால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை எவ்வாறு பாதுகாக்கப்படும். ஆகவே தவறான அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க      சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபாநாயகரின் அறிவிப்புக்களை சவாலுக்குட்படுத்த கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் காணப்படுகிறது. இருப்பினும் சபாநாயகரின் அறிவிப்பு பாராளுமன்றத்தினதும், நாட்டின் ஏனைய செயற்பாடகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பாராளுமன்றம் எடுத்துள்ள தீர்மானத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது என்று நீங்கள் (சபாநாயகரை நோக்கி) கடந்த 09 ஆம் திகதி சபைக்கு அறிவித்தீர்கள்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு அன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஏதேனும் மயக்கநிலை காணப்படுமாயின் தீர்ப்பின் பின்னர் பாராளுமன்ற அறிவிப்பை உங்களால் வெளிப்படுத்தியிருக்க முடியும்.நீங்கள் வழங்கிய அறிவிப்பு முற்றிலும் தவறு. நம்பிக்கையில்லா பிரேரணை, தேசிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மக்களின் அபிலாசைகளை கோரல் ஆகியன மாத்திரமே பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் யோசனை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் சட்டமூலத்தை நாட்டு மக்களுக்கு உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும்.ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் சட்டமூலமா அல்லது ஒழுங்குவிதியா என்பதை உங்களிடம் (சபாநாயகர்) கேட்க விரும்புகிறேன். ஏதும் இல்லை அது வெறும் யோசனை மாத்திரமே.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்கள் தொடர்பில் இறுதி மதிப்பீடு நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, அதை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியதும் நீதிமன்றத்தால் சவாலுக்குட்படுத்த முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஊழியர் சேமலாப நிதியம்  சட்டமூலம் அல்லது அது யோசனை மாத்திரமே,

ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் 'நாட்டில் உள்ள சகல நீதிமன்றங்களையும் மூட வேண்டும் என ஒருவர் யோசனையை முன்வைத்தால் அதை 134 உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள், பிறகு அதை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாதா ? ஆகவே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் யோசனைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையை நீதிமன்றத்தில் ஏன் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆகவே நீங்கள் கடந்த 09 ஆம் திகதி சபைக்கு அறிவித்த விடயம் முற்றிலும் தவறானது.

எதிர்காலத்துக்கும் அது தவறானதொரு எடுத்துக்காட்டாக அமையும். அத்துடன் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே நீங்கள் ( சபாநாயகர்) கடந்த 09 ஆம் திகதி விடுத்த அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள். உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே சட்டமூலங்கள் சட்டமாக்கப்படுகிறது.

யோசனைகளை எவ்வாறு சட்டமாக கருத முடியும். இது அரசியலமைப்பு மீறல் செயற்பாடாகும். நீதிமன்றம் அதன் வேளையை பார்த்துக் கொள்ளட்டும். பாராளுமன்றம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நாளன்று நீங்கள் (சபாநாயகர் ) வழங்கிய அறிவிப்பு முற்றிலும் தவறு. ஆகவே தவறான எடுத்துக்காட்டுக்கு பாத்திரமாக அமைய வேண்டாம். பாராளுமன்ற நிதி அதிகாரத்தில் உயர்நீதிமன்றமல்ல, எந்த நீதிமன்றமும் தலையிட கூடாது என்று வழங்கிய அறிவிப்பை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37