எம்முடைய நாளாந்த பண தேவை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எம்மில் பலரும் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை எம்முடைய வீடுகளில் நிரந்தரமாக தங்கி, அருள் ஆசி வழங்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால் அதற்கான எளிய உபாயத்தை தெரிந்து கொள்ளாமலும், சிலர் தெரிந்து கொண்டும் அதை பின்பற்றாமலும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் மகாலட்சுமியை பல்வேறு காரணங்களால் பல்வேறு வகைகளில் எம்முடைய வீடுகளில் தங்க வைத்து அவர்களின் அருளைப் பெறலாம் என்ற என எம்முடைய ஆன்மீக பெரியோர்கள் சில விடயங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
மகாலட்சுமி தேவி கடலில் வாசம் செய்வதாலும், எம்முடைய மண்- நான்கு திசைகளிலும் கடலால் சூழப்பட்டு இருப்பதாலும், கடலில் காணப்படும் சிப்பிகளில் ஒரு வகையான சோவி எனப்படும் சிப்பிகளை சேகரித்து, எம்முடைய வீட்டில் வைத்திருந்தால்... தனவசியம் ஏற்பட்டு, செல்வ வளம் உயரும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியின் அருளும் கிட்டும்.
மகாலட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை அதிலும் குறிப்பாக பாதரசத்தில் உருவான சிலைகளை எம்முடைய வீடுகளில் வைத்திருந்தால்... மங்களம் பெருகும் என்பார்கள். ஏனெனில் பாதரசம் என்பது அனைத்து கடவுள்களுக்கும் பிடித்த ஒன்று. அதனால் பாதரசத்தினால் செய்த சிலையை எம்முடைய வீட்டிற்குள் வைத்து வணங்குவதால், மகாலட்சுமியின் அருளும், செல்வ வளமும் உயரும்.
மகாலட்சுமி மற்றும் விநாயகர் சிலைகளை அருகருகே வைத்து வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவி சாந்தமடைந்து அருள் புரிவார். மேலும் இந்த சிலைகள் வெள்ளியால் உருவாக்கப்பட்டிருந்தால் கூடுதல் நன்மைகளை வழங்குவார். அத்துடன் இவ்விரண்டு சிலைகள் வீட்டில் இருப்பதால் குளிர் தன்மை அதிகமாகி மகாலட்சுமி வீட்டிலேயே தங்கி அருள் புரிய தொடங்குவாள்.
பாதரசத்தால் உருவான சிலைகளையோ... வெள்ளியால் தயாரான சிலைகளை செய்ய முடியாதவர்கள்.. லட்சுமி தேவியின் கால் தடத்தை வெள்ளியால் செய்து அதை எம்முடைய பூஜை அறையில் வைத்து வணங்கத் தொடங்கினாலும் பணம் பெருகும்.
மகாலட்சுமி தாமரையில் வாசம் செய்வதால் எம்முடைய வீடுகளில் தாமரை விதைகளால் தயாரிக்கப்பட்ட ஜெபமாலையை வைத்திருந்தாலும்... அதனால் லெட்சுமி தேவி வசீகரிக்கப்பட்டு, எம்முடைய வீட்டிற்குள் வருகை தந்து அருள் ஆசி வழங்கி செல்வ நிலையை உயர்த்துவார்.
மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது சங்கு. அதிலும் குறிப்பாக வலம்புரி சங்கில் தண்ணீரை நிரப்பி அதனை தென்திசை நோக்கி வைத்தால்.. மகாலட்சுமி எம்முடைய வீட்டிற்குள் வருகை தந்து அருள் புரிவார்.
ஒற்றைக்கண் தேங்காய் அல்லது தேங்காய்களில் லட்சுமி வாசம் செய்வதாகவும், இது லட்சுமி தேவிக்கான உணவுப் பொருள் என்றும், தூய்மையான பழமாகவும் போற்றப்படுகிறது. இதனை எம்முடைய வீடுகளில் வைத்திருப்பதால், லட்சுமி தேவி அழைப்பு விடுக்காமலேயே எம்முடைய வீடுகளில் வருகை தந்து அருளாசி புரிவார்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தி, லட்சுமி தேவியை எம்முடைய வீடுகளில் வரவழைத்து நிரந்தரமாக அங்கேயே தங்கி விடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால் எம்முடைய செல்வ நிலை உயரும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM