நடிகர் சதீஷ் நடிக்கும் 'வித்தைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Ponmalar

11 Aug, 2023 | 03:55 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ் கதையின் நாயகனாக நடித்து வரும் 'வித்தைக்காரன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதன் ராவ், சுப்பிரமணிய சிவா, ஜான் விஜய், பவல் நவகீதன், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி பி ஆர் இசையமைத்திருக்கிறார். மாயாஜால நிபுணர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் கார்பெட் பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. விஜய் பாண்டி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து படத்தின் பின்னணி வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும், ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்த 'நாய் சேகர்' எனும் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியை பெற்றதாலும், அவருடைய நடிப்பில் வெளியான ' ஓ மை கோஸ்ட்' வெற்றியை பெறத் தவறியதாலும், 'வித்தைக்காரன்' படத்தின் வெற்றி, நடிகர் சதீஷின் திரையுலக பயணத்தை நிர்ணயிக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right