இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அடியே' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பல நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 25ஆம் திகதியன்று படமாளிகைகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களும் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
இதில் படத்தில் நடித்த நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் விஞ்ஞானி மற்றும் இயக்குநர் வாசுதேவ் மேனன் எனும் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
சினிமா வரலாற்றில் முதல்முறையாக நான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இரண்டுமே நடிப்பதற்கு கஷ்டமான கதாபாத்திரங்கள் தான். எனினும் இயக்குநர் வாசுதேவ் மேனன் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
அதனால் எளிதாக இருந்தது. இப்படத்தின் கதை மல்டிவர்ஸ் எனும் சயின்ஸ் ஃபிக்ஷனுடன் இணைந்த காதல் கதையாக இருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM