(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கையில் நீர் கசிவு இல்லா வீடுக்களுக்காக நீர்த்தடுப்பு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஓர் நடவடிக்கையாக 'Mahamama of Waterproofing' எனும் விளம்பர வேலைத்திட்டத்தை Pidilite Lanka நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
படப்பிடிப்பு ஜே. சுஜீவ குமார்
Pidilite Lanka நிறுவனமானது, இலங்கையில் புகழ்பெற்ற Mac larens குழுமத்தின் ஒன்றான Mac bertan மற்றும் Pidilite industries ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமாகும்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நீர்த்தடுப்பு தயாரிப்பான Dr.Fixit இன் வர்த்தக நாம தூதுவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரொஷான் மஹநாம நியமிக்கப்பட்டுள்ளதை Pidilite Lanka நிறுவனம் கொழும்பில் புதனன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்நிகழ்வின்போது கருத்து தெரிவித்த தாய் நிறுவனமான Pidilite industries சர்வதேச செயல்பாடுகளுக்கு பொறுப்பான தலைமை அதிகாரி யோகேஷ் ஆனந்த் தெரிவிக்கையில்,
"நிறுவனத்தின் வீடுகளை நிர்மானிக்கும்போதும் புனரமைக்கும்போதும் சரியான வகை நீர்புகா தீர்வுகளை பயன்படுத்துவது அவசியமாகும். இல்லையெனில், நீர்க்கசிவு காரணமாக பல்வேறு வகையான சேதங்கள் ஏற்பட்டு, கட்டடச் சேதங்கள் மற்றும் மோசமான சுகாதார சேதங்கள் ஏற்படலாம்.
இதனால், Pidilite அறிமுகப்படுத்திய மிகவும் வெற்றிகரமான தயாரிப்பான Dr. Fixit நீர்ப்புகா மற்றும் நீர்ப்புகாமல் இருப்பதற்கான சிறந்த தீர்வாகும். சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான ரொஷான் மஹநாமவை எமது வர்த்தக நாம தூதுவராக நியமித்திருப்பதன் மூலம் விழிப்புணர்வு பணிகளுக்கு அவரிடமிருந்து பெருமளவு ஒத்துழைப்பு கிடைக்கும்.
இந்த ஒத்துழைப்பின் மூலமாக நீர்த்தடுப்பு முக்கியத்துவம் குறித்து இலங்கையர்களுக்கு வெற்றிகரமான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொரு இலங்கையரையும் நீர்க்கசிவு இல்லாத வீட்டு உரிமையாளராக உருவாக்க வேண்டும்" என்றார்.
Dr.Fixit , இன் வர்த்தக நாம தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் மஹநாம கூறுகையில்,
"எனது வாழ்க்கைக்கு சிறந்த அடித்தளத்தை எனது பெற்றோர் எனக்கு தந்தனர். அவர்களைப் போலவே என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியவர் எனது முதற் பயிற்றுநரான நெல்சன் மெண்டிஸ் ஆவார். புதிதாக ஒரு வீட்டை நிர்மானித்ததன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து நீர் கசிவு ஏற்பட்டு வீடு சேதமாகாலம். இதனை தடுப்பதற்கு Dr.Fixit பயன்படுத்துவது பொறுத்தமாகும். ஆகவே புதிதாக ஒரு வீட்டை நிர்மானிக்கும்போதும், புனரமைக்கும்போதும் நீர் கசிவு, நீர்புகாமல் இருப்பதற்கு Dr. Fixit சிறந்த தீர்வாகும்.
பொதுவாக சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களுக்காக மாத்திரமே நான் தூதுவர் என்ற பொறுப்பபை ஏற்பதுண்டு. எனினும், Dr.Fixit டை தயாரிக்கும் Pidilites நிறுவனமானது, சர்வதேச ரீதியில் பல்வேறு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளபட்டதும், வியாபாரத்தை தாண்டிய பல்வேறு சமூகம் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற காரணங்கள் முக்கிய இடத்தை வகிக்கிறது.
அத்துடன், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அமிதாப் பச்சன் Dr. Fixit இன் இந்திய தூதுவராக இருப்பதன் காரணத்தினால் ஆகும். வியாபாரத்தை மாத்திரம் மையப்படுத்திய விடயங்களுக்கு அவர் அவ்வளவு முன்னுரிமை அளிப்பதில்லை. ஆகவேதான், நானும் Dr.Fixit வர்த்தக நாம தூதுவராக இருப்பதற்கு சம்மதித்தேன்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM