மட்டக்களப்பில் கடும் வறட்சியும் உஷ்ணமும் அதிகரிப்பு ; குடிநீரைப் பெற மக்கள் திண்டாட்டம் !

Published By: Digital Desk 3

11 Aug, 2023 | 03:17 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெய்யிலுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் அதிக வறட்சி நிலமையையும் அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியுள்ளன.

குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படாத கிராமப்பபுறங்களில் மக்கள் குடிநீருக்காக அதிகளவு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் 14 கிராம சேவையாளர் பிரிவுகளில் 3 பௌஸர்கள் மூலம் தினமும் 20,000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு வழங்கி வருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபை நிருவாகம் தெரிவிக்கின்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்குடிநீர் வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை மேலும் தெரிவிக்கின்றது.

இது இவ்வாறு இருக்க தற்போது நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

போரதீவுப்பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம்  உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக  வற்றியுள்ளன.

இந்நிலையில், வற்றிய குளங்களில் அப்பகுதி மக்கள் அத்தாங்கு, கரப்பு, வலை, போன்றவற்றைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி மீன் பிடித்து வருவதோடு, உள்ளிநாட்டு வெளிநாட்டு பறவைகளும் அக்குளங்களில், இரைதேடி வருகின்றன.

அதிக வெய்யில் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34
news-image

சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய,...

2025-03-24 22:07:01
news-image

நாடளாவிய ரீதியில் 6 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 19:18:53
news-image

மின்சார சட்ட திருத்தம் தொடர்பில் மின்சக்தி...

2025-03-24 16:41:13
news-image

குருணாகலில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் 10...

2025-03-24 20:05:45
news-image

கணித வினாத்தாள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட...

2025-03-24 19:10:07