(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது சபையில் அமைச்சர்கள் இல்லை .எனவே அமைச்சர்களுக்கு மலையக மக்கள் மீது அக்கறையில்லை என்பது உங்கள் குற்றச்சாட்டு.
அப்படியானால் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வெள்ளிக்கிழமை (11) கலந்துரையாடுவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியே உங்கள் எல்லோரையும் அழைத்தபோது நீங்கள் நிராகரித்து விட்டு உங்கள் கட்சி நிகழ்வுக்கு செல்வது மலையக மக்கள் மீதான அக்கறையிலா என தமிழ் முற்போக்கு கூட்டணியினரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பி.யான உதயகுமார் உரையாற்றிய போது முன் வைத்த குற்றச் சாட்டுகளுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
அதன்போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சபையில் விவாதம் நடக்கும் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ ஏனைய அமைச்சர்களோ சபையில் இல்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே உரையாற்றிய மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் முன்வைத்திருந்த நிலையில் உதயகுமார் எம்.பி.யும் அந்தக் கருத்தை முன்வைத்தார்.
அப்போது எழுந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், நான் உங்களுக்கு இனி குறுக்கீடு செய்யமாட்டேன். ஆனால் எனது இந்தக்கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள். அதாவது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது சபையில் அமைச்சர்கள் இல்லை .எனவே அமைச்சர்களுக்கு மலையக மக்கள் மீது அக்கறையில்லை என்பதுதானே உங்கள் குற்றச்சாட்டு அதாவது அமைச்சர்கள் தமது வேறு வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்கள் என்றுதானே கூறுகின்றீர்கள். .
அப்படியானால் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை (11) கலந்துரையாடுவதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியே உங்கள் எல்லோரையும் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுத்தபோது நீங்கள் உங்கள் கட்சியின் நிகழ்வொன்றுக்காக அந்த அழைப்பை நிராகரித்து ஒத்திவைத்தது மட்டும் மலையக மக்கள் மீதான அக்கறையிலா எனக்கேட்டார்.
இதற்கு பதிலளித்த உதயகுமார் எம்.பி ,அதற்கும் இதற்கும் முடிச்சு போடவேண்டாம். காலையில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மட்டும்தான் இங்கிருந்தார். அதற்கு பின்னர் அவரும் இல்லை. தற்போது நீங்கள் இருக்கின்றீர்கள். ஜனாதிபதியின் செயற்பாடுகள் எங்களுக்கு தெரியும்.
அரசியல் ரீதியாக அவரின் செயற்பாடுகள் தெரியும்தானே ..தற்போது எனக்குள்ளது குறுகிய நேரம்.அதில் நான் இந்த விடயங்களை பேச விரும்பவில்லை ஏனென்றால் மலையக மக்கள் இந்த பிரேரணையை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளை நான் வெளிக்கொண்டு வர வேண்டும் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM