தோட்டங்களை கம்பனிகளுக்கு அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்தாலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியது பாராளுமன்றமாகும் - வே.இராதாகிருஷ்ணன்

Published By: Vishnu

10 Aug, 2023 | 09:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்டங்களை தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்துள்ளபோதும் அந்த மக்களை வழங்கவில்லை. 

அதனால் அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியது இந்த பாராளுமன்றமாகும். அத்துடன் மலையக பெருந்தோட்டங்களில் முறையான மலசலகூட வசதி இன்றி 36,158 பேரும்,  முறையான குடிநீர் வசதிகள் இன்றி 51,784 பேரும் உள்ளனர் இந்த பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும் என  எதிர்க்கட்சி உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலையகம் என்பது பொதுவாக நுவரெலியா, பதுளை, காலி, இரத்தினபுரி, கேகாலை, கண்டி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். கிட்டத்தட்ட 24 கம்பனிகள் 409 தோட்டங்களை நிர்வகிக்கின்றன. பெருந்தோட்டத் துறையில் 9 இலட்சத்து 93 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். அங்கே 2 இலட்சத்து 68 ஆயிரத்து 273 வேலையில்லா ஆண்கள் வசிக்கின்றனர். 2 இலட்சத்து 86 ஆயிரத்து 656 வேலையில்லா பெண்கள் உள்ளனர். தோட்டப்புறங்களில் வருமை நிலைமை 51.3 வீதமாக உள்ளது. மலசலகூடங்கள் இன்றி 36 ஆயிரத்து 158 பேர் உள்ளனர். குடி நீர் இன்றி 51 ஆயிரத்த 784 பேரும் உள்ளனர்.

இதேவேளை தனி வீடமைப்பு திட்டத்தில் சந்திரசேகரன் அமைச்சராக இருந்த காலத்தில் 15,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்போது சந்திரிகா ஆட்சியின் போது வீட்டுக்காக 20 பேர்ச்சர்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தில் 7 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நல்லாட்சி ஆட்சி காலத்தில் 4592 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் 2021 முதல் 2022 வரையில் 382 வீடுகளே அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 650 வீடுகள் பெருந்தோட்டத்திற்கு மொத்தமாக தேவைப்படுகின்றன. ஆனால் இப்படி போனால் இந்த வீடுகளை அமைத்து முடிக்க 25 வருடங்களாவது செல்லும்.

இதேவேளை தோட்டங்களில் வேலையில்லாதவர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறப்பட்ட போதும், இன்னும் நடக்கவில்லை. அவர்களுக்காக காணிகளை வழங்கி ஏதேனும் பயிர் செய்கைகளுக்கு இடமளிக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்கள் வேறு நாட்டுக்குள் இருப்பதை போன்றே தோட்ட நிறுவனங்கள் நடத்துகின்றன. ஏதேனும் கேட்டுப் போனால் அவர்கள் அடக்கப்படுகின்றனர். எதற்கும் ஒத்துப் போகாத தோட்ட முகாமையாளர்கள் உள்ளனர். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அங்குள்ள தரிசு நிலங்களை இளைஞர்களுக்கு வழங்குங்கள். அவற்றை தோட்டங்களில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள்.

இதேவேளை தோட்டங்களில் லயன்கள் தீப்பற்றுகின்றன. இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்டவை கவனம் செலுத்துவதில்லை. இது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிகை எடுக்க வேண்டும். 

எனவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் தெரிவிப்பது, பெருந்தோட்டங்களை குத்தகைக்கு தோட்ட கம்பனிகளுக்கு வழங்கி இருக்கலாம். ஆனால் அந்த மக்களை  கொடுக்கவில்லை. அதனால் தோட்ட மக்களின் பிரச்சினை தொடர்பாக இந்த அரசாங்கமும் பாராளுமன்றமுமே பாெறுப்புக்கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48
news-image

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி 

2026-02-18 13:06:24