கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை தொடர்வது குறித்து நீதிமன்றம் 17ஆம் திகதி உறுதிப்படுத்தும்!

Published By: Vishnu

10 Aug, 2023 | 04:42 PM
image

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய வியாழக்கிழமை (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் சம்பவ இடத்திற்கு கள விஜயம் செய்திருந்தார்கள். 

கள விஜயத்தின் பின்னர் இது  தொடர்பாக சட்டத்தரணி ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி வழக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை போன்று சந்தேகத்திற்கிடமான பிரதேசத்தை பார்வையிடுவதற்கு அழைக்கப்பட்ட தாெல்பொருள்  திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தார்கள் அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியர் வாசுதேவாவும் , வேறு நிறுவனமும் பிரசன்னமாகியிருந்தார்கள்.

தொல்பொருள் திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு இதற்கான பாதீடும், திட்டமும் ஒரு கிழமைக்குள் நீதிமன்றுக்கு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

ஆகவே அவர்கள் இந்தமாதம் 17ஆம் திகதி அதற்கான திட்டங்களை தாக்கல் செய்ய இருக்கின்றார்கள்.

அதனை தொடர்ந்து 21ஆம் திகதி இந்த அகழ்வு பணி நடைபெற தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29
news-image

இரு குழுக்களுக்கிடையில் மோதல் : கூரிய...

2024-04-14 13:55:55