நவீனத்துவத்தின் அடிமைகளாகவே எமது மக்கள் இன்றும் : அனுதாபம் வேண்டாம் எமக்கான உரிமைகளை கோருகிறோம் - மனோ

Published By: Vishnu

10 Aug, 2023 | 05:27 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நவீனத்துவத்தின் அடிமைகளாகவே எமது மக்கள் இன்றும் வாழ்கிறார்கள். அனுதாபத்தை கோரவில்லை. எமக்கான உரிமைகளை நியாயமாக கோருகிறோம். இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 300 கோடி ரூபாவை அரசாங்கம் பெருந்தோட்ட சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும்.

இந்தியாவை போன்று பிரித்தானியாவும் பெருந்தோட்ட சமூகம் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்  என்பதை உயரிய சபை ஊடாக கொழும்பில் உள்ள பிரித்தானியாவுக்கான பதில் உயர்ஸ்தானிகரிடம் முன்வைக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்ட மக்கள் பின்தள்ளப்பட்ட சமூகமாக  இரு நூற்றாண்டு காலமாக வாழ்கிறார்கள் என்பதை சர்வதேச மதிப்பாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன் பெருந்தோட் மக்கள் 'நவீன அடிமைத்துவத்தின் அடையாளமாக வாழ்கிறார்கள்  என ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்தியாவில் இருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பெருந்தோட்ட எமது உறவுகள் கடந்த 200 வருடகாலமாக நலிவுற்றஇஉரிமையற்ற சமூகமாகவும்இபல துயரங்களையும் அடக்கு முறைகளையும் எதிர்கொள்பவர்களாகவே வாழ்கிறார்கள்.

கடந்த 200 வருட காலத்தில் பிரிட்டிஸ் வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்து மாநிற பேரினவாத ஆட்சிக்கு பெருந்தோட்டங்கள் சென்றுள்ளதே தவிர முன்னேற்றகரமான எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

நவீன அடிமைத்துவத்தில் பெருந்தோட்ட எமது உறவுகள் போசாக்கின்மை, உணவு பாதுகாப்பின்மை, பாலியல் வன்கொடுமைகள், தொழில் சுரண்டல்கள், பாரபட்சம், அதிக சுமை, குறைவான கூலி, காணி உரிமை மறுப்பு உள்ளிட்ட இன்னோரன்ன பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.காலம் காலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நாங்கள் அனுதாபத்தை கோரவில்லைஇநியாயமான தீர்வினையே கோருகிறோம்.

 இலங்கையில் வாழும் பெருந்தோட்ட மக்கள் குறித்து இந்தியா விசேட கவனம் செலுத்தியுள்ளது.உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் முன்னேற்றங்களுக்கு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வண்ணம் உள்ளது.பெருந்தோட்ட அபிவிருத்திகளுக்காக இந்தியா அண்மையில் 300 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதற்கு பெருந்தோட்ட மக்கள் சார்பில் இந்திய அரசுக்கும்இஇந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பிரதான பிரச்சினையாக உள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் அப்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த லக்ஷ்மன் கிரியெல்ல பெருந்தோட்ட மக்களுக்கு சட்ட ரீதியிலான ஆவணத்தை பெற்றுக்கொடுத்தார்.அப்போது 7 பேச்சர்ஸ் காணி என்று குறிப்பிடப்பட்டது.தற்போது 10 பேச்சர்ஸ் காணி என்று குறிப்பிடப்படப்படுகிறது.

07 பேச்சர்ஸ் காணி 10 பேச்சஸ் அதிகரிக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.ஆனால் வழங்கப்படும் காணிகளுக்கு உரிய சட்ட அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

பெருந்தோட்ட மக்கள் கடந்த 200 வருடகாலமாக இலங்கை பிரஜைகளாகவே வாழ்ந்து நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்களின் உழைப்பை இன்றும் அர்ப்பணித்து வருகிறார்கள்.இருப்பினும் பெருந்தோட்ட மக்கள் இரண்டாம் தரப்பினராகவே பார்க்கப்படுகிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இரத்தினபுரிஇகாலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் புதிய பிரதேச செயலகங்களை ஸ்தாபிப்பதற்காக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானிக்கு அமைய இரத்தினபுரிஇகாலி மாவட்டங்களில் பிரதேச செயலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.ஆனால்  நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய பிரதேச செயலகங்கள் முழுமையாக ஸ்தாபிக்கப்படவில்லை.இன்றும் இழுபறி நிலையே காணப்படுகிறது.இது ஒரு வேறுப்படுத்தல் உதாரணமாக குறிப்பிடலாம்.பல உதாரணங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன.

பெருந்தோட்ட மக்கள் கடந்த 200 வருடகாலமாக இலங்கை பிரஜையாகவே வாழ்கிறார்கள்.ஆகவே எம்மை இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் எமது மக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.நாங்கள் எவரின் அனுதாபத்தையும் கோரவில்லை.எமக்கான உரிமையைஇநியாயம்  ஆகியவற்றையே கோருகிறோம்.

பெருந்தோட்ட மக்களுக்காக இந்தியா 3000 கோடி ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.இந்த நிதியை பெருந்தோட்ட சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக பயன்படுத்துங்கள் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.வீடமைப்புஇஉட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு ஏற்கெனவே பல திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்காக இந்தியா ஒத்துழைப்பு வழங்குவதை போன்று பிரித்தானிய அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு பிரித்தானியா ஸ்ரேலிங் பவுண் வழங்கி பல திட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்பதை கொழும்பில் உள்ள இலங்கைக்கான பதில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்துகிறேன். இவர் இந்த கோரிக்கையை லண்டனுக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா?...

2025-03-25 19:14:12
news-image

தேர்தலில் அரசாங்கத்தின் வாக்குகள் சிதறப் போகின்றன...

2025-03-25 17:05:57
news-image

தேர்தலுக்காக பொய் கூறும் அரசாங்கத்துக்கு மக்கள்...

2025-03-25 17:06:50
news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

"சிவாகம கலாநிதி" தானு மஹாதேவ குருக்களின்...

2025-03-25 18:49:33
news-image

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்த திட்ட...

2025-03-25 18:33:35
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

மோசமான செயற்பாடுகள் மூலம் யாழ். மாவட்ட...

2025-03-25 18:53:59
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04