(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இலங்கைக்கு முதலிடம் என்ற வெளிநாட்டு கொள்கையுடன் நாட்டுக்காக செயற்படுகிறோம். இந்தியாவுடன் பேசப்பட்ட விடயங்கள், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற அமர்வின் போது பிரேரணை முன்னறிவித்தல்கள், தினப்பணிகள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது சேது சமுத்திர திட்டம், திருகோணமலை பொருளாதார வலயம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பப்பட்டுள்ளன.
இந்தியா எமது அயல் நட்பு நாடு என்பதில் எவ்வித மாற்றமுமில்லை,நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் நாடு என்ற ரீதியில் நாட்டின் தேசிய ஆட்புல ஒருமைப்பாடு,சுயாதீனம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆகவே அந்த ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்த முடியுமா என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி இந்தியாவுடனான பேச்சுவார்த்தை இலங்கைக்கு சார்பானதாகவே உள்ளது. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கலாம்.
பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.2030 ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தை அடையவும்,2050 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை அடையவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் இலங்கைக்கு பல வழிமுறைகளில் சாதகமாக அமையும்.
வரலாற்றில் கைதியாக செயற்பட வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது. நாட்டுக்கு பயன்பெறும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஸ்ரீ லங்காவுக்கு முதலிடம் என்ற வெளிநாட்டு கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM