ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி, மூன்று ஆட்டோக்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை (09) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த, வஸ்கடுவ பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய தம்பதியரே காயமடைந்துள்ளனர்.
வஸ்கடுவவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிலிருந்து ஹிக்கடுவைக்கு ரஷ்ய தம்பதிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி, கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் அதே திசையில் பயணித்த ஆட்டோவுடன் மோதி, முன்பக்க பாதையில் இழுத்துச் செல்லப்பட்டு, மேலும் 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களில் ரஷ்ய தம்பதியினர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM