சந்திரயான்-3 சுற்றுப்பாதை அடுத்த நிலைக்கு மாற்றம்

10 Aug, 2023 | 09:53 AM
image

புதுடெல்லி: நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது.

இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு பூமியை வலம்வந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரத்தை அதிகரித்து ஆக. 1-ம்தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது.

5 நாள் பயணத்துக்கு பிறகு ஆக.5-ம் தேதி நிலவின் வட்டச் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதை உயரத்தை படிப்படியாக சுருக்கி விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சந்திரயான் பயணப்பாதை 6-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று மதியம் 1.30 மணிக்கு திரவ வாயு இயந்திரம் இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ.இ அதிகபட்சம் 1437 கி.மீ. தொலைவு கொண்ட நிலவு வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வலம் வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவின் ஊடக நிறுவனங்களுடன் இலங்கை அரசாங்கம்...

2025-01-15 10:41:45
news-image

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான...

2025-01-15 09:25:20
news-image

தென்கொரிய ஜனாதிபதி சற்று முன்னர் கைது

2025-01-15 08:13:44
news-image

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி-...

2025-01-15 07:05:42
news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22