அமெரிக்காவிலிருந்து அனுப்பிய டொலர் அடங்கிய பார்சலை விடுவிக்க சுங்க அதிகாரி போன்று நடித்த பெண்ணிடம் 95 ஆயிரம் ரூபாவை இழந்த மட்டக்களப்பு பெண்

Published By: Vishnu

10 Aug, 2023 | 07:23 AM
image

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைக்கடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பாசல் ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம்  மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை பறிகொடுத்து ஏமாந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது, 

அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைகாரர் பெண் ஒருவர்  மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவருடன் வட்ஸ் ஆப் மூலம் நட்பு ஏற்பட்டு இருவரும் நீண்ட காலமாக நட்புறவாடி வந்துள்ள நிலையில் உங்களுக்கு பெரும் பணம் தங்க ஆபரணங்கள் வெகு விரைவில் கிடைக்கும் தான் பெரிய பணக்காரர் என பெண்ணிடம் அமெரிக்க நண்பி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள நகர் பகுதியைச்  சேர்ந்த பெண்ணிற்கு இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசியின் இலக்கத்தில் இருந்து வட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் விமான நிலைய சுங்க திணைக்களத்தில் கடமையாற்றி வருதாகவும் உங்கள் பெயர், விலாசத்திற்கு அமெரிக்காவில் உள்ள உங்கள் வெள்ளைக்கார நண்பி பாசல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த பாசலில் 70 ஆயிரம் டொலர் தங்க ஆபரணங்கள், கைக்கடிகாரம் இருப்பதாகவும் டொலரை பாசலில் அனுப்ப முடியாது. இது சட்டவிரோதமானது எனவே இந்த பார்சலை சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்க 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் பார்சலில் உள்ள 70 ஆயிரம் கொண்ட டொலரை வீடியோ எடுத்து வட்ஸ் ஆப்பில் அனுப்பி பணத்தை வங்கி ஊடாக அவசரமாக அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வட்டஸ் ஆப்பில் அனுப்பிய வீடியோவை நம்பி உடனடியாக மோசடி கும்பல் அனுப்பிய வங்கிக் கணக்கில் 95 ஆயிரம் ரூபாவை அனுப்பிய பின்னர் சுங்கத் திணைக்களத்தில் வேலை செய்வதாக நடித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து தான் ஏமாற்றுப் பேர்வழியால் 95 ஆயிரம் ரூபா பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளதை மட்டக்களப்பு பெண் உணர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம்  ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது. இதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என ஒரு இலட்சம் தொடக்கம் 6 இலட்சம் ரூபா வரை இவ்வாறான மோசடி கும்பலுக்கு பலர் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர் எனவே இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது!

2025-01-25 11:40:26
news-image

அநுராதபுரத்தில் புதையல்களுடன் ஒருவர் கைது !

2025-01-25 11:24:21
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி ; கடந்த...

2025-01-25 11:20:39
news-image

வாழைச்சேனையில் இரு குழுக்களுக்கிடையில் தகராறு ;...

2025-01-25 11:00:29
news-image

யோஷித்த ராஜபக்ஷ கைது!

2025-01-25 10:21:57
news-image

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா

2025-01-25 10:38:26
news-image

யாழ். பலாலியில் 101 கிலோ கேரள...

2025-01-25 10:00:45
news-image

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மது...

2025-01-25 10:27:23
news-image

மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூட்டு...

2025-01-25 09:50:15
news-image

கல்கிஸ்ஸவில் 29 வயதுடைய போதைப்பொருள் வர்த்தகர்...

2025-01-25 09:44:02
news-image

இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு...

2025-01-25 09:36:14
news-image

ஜனாதிபதி கீழ் நிலைக்கு செல்வாரென்று எதிர்பார்க்கவில்லை...

2025-01-25 08:43:57