கிழக்கில் மகாவலி காணிகளில் சட்டவிரோத குடியமர்வு : நீர்ப்பாசன அமைச்சரின் 'பலமு மல்லி' பதில் அதிருப்திக்குரியது - சாணக்கியன்

Published By: Vishnu

09 Aug, 2023 | 06:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமக்கான அதிகாரங்கள் எமக்கு வழங்கினால் எமது மாவட்ட பிரச்சினைகளை நாங்களே  தீர்த்துக் கொள்வோம். கிழக்கு மாகாணத்தில் மகாவலி நிலங்களில்  இடம்பெறும் சட்டவிரோத குடியமர்வு தொடர்பில் நீர்பாசனத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்ட போது 'பலமு மல்லி' என்ற பதில் அதிருப்திக்குரியது என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமைச்சரவையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கூட அவர் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.ஆனால் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு தொடர்து அமைச்சு பதவிகளில் உள்ளார்.

இதன் காரணமாகவே  தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலை கோருகிறார்கள்.

உண்மையில் மீன்பிடித்துறை அமைச்சரிடம் கிழக்கு மாகாணம் தொடர்பாக பல பிரச்சினைகளை முன்வைத்திருந்தாலும் இதுவரை தீர்வுகள்  ஏதும் கிடைக்கவில்லை.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பில் அதிகளவில்  மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

எனவே அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். உரிய துறைக்கு ஒரு தமிழரே அமைச்சராக இருக்கின்றார்.

எனவே ஒரு அமைச்சரவை அந்தஸ்த்து இருந்தும்கூட இதுவரை தீர்வுகள் பெறப்படவில்லை என்பதால்தான் நாங்கள் அதிகாரப் பரவலாக்கம் மூலம் எமக்கான அதிகாரங்களைக் கோருகின்றோம்.

எமது கரங்களில் அதிகாரங்கள் தரப்பட்டால் நாமே எமது பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணத்தில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் பிற தரப்பினரால் சூறையாடப்படுகிறது.

காடாகியுள்ள ஒரு காணியை காலையில் சுத்தம் செய்கிறார்கள். பகல் பொழுது குடியிருப்பு அமைக்கிறார்கள்,பெரிய தென்னை மரத்தை நாட்டுகிறார்கள்.

மாலையில் குடிபுகுகிறார்கள்.வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் அத்துமீறிய வகையில் இவ்வாறு செய்கிறார்கள்.இவ்விடயம் தொடர்பில் நீர்பாசன,   மகாவலி அபிவிருத்தி அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் குறிப்பிட்ட போது 'பலமு மல்லி 'என்கிறார்.

கிழக்கு மாகாணத்தில் மந்தை மேய்ச்சலில் ஈடுபடும் தரப்பினருக்கு மேய்ச்சல் பகுதி வழங்கப்படாத நிலையில் வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் அத்துமீறிய வகையில் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் நீர்பாசனத்துறை அமைச்சரின் பலமு மல்லி என்ற பதில் அதிருப்திக்குரியது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் வகையில்...

2024-07-16 02:52:10
news-image

கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை...

2024-07-16 02:46:11
news-image

தேசிய இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வை முன்வைப்பதற்கு...

2024-07-16 02:37:44
news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15