இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதிய லொறி : பொலிஸ் கான்ஸ்டபிளும் ஆசிரியரும் காயம்!

09 Aug, 2023 | 02:43 PM
image

பண்டாரகம, கம்புருகுடா பகுதியில் லொறி ஒன்றுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தின் போது படுகாயமடைந்த ஒருவர் மில்லனிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் எனவும்  மற்றொருவர் பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் தங்காலை கெகுலோகமுவ மோதர பிரதேசத்தை சேர்ந்தவராவார். 

பண்டாரகமவிலிருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த குறித்த லொறி எதிரே பயணித்த லொறியை முந்தி செல்ல முற்பட்டபோது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஆசிரியர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:13:36
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34
news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26