(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் நிலையான சமாதானம் எனும் தொனிப்பொருளில் இம்முறை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ் தெரிவித்தார்.

இலங்ககையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் 14ஆவது சர்வதேச வெசாக் கொண்டாட்டம் தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு புத்தசாசன அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.