இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து வெற்றிக்கு திரும்பிய நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ்

09 Aug, 2023 | 10:05 AM
image

(நெவில் அன்தனி)

இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் கலம்போ ஸ்ட்ரைக்ர்ஸை வீழ்த்தியதன் மூலம் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் மீண்டும் வெற்றிக்கு திரும்பியுள்ளது.

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு மின்னொளியில் நடைபெற்ற 13ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஜெவ்னா கிங்ஸ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியை அடுத்து கருத்து வெளியிட்ட ஜெவ்னா கிங்ஸ் அணித் தலைவர் திசர பெரேரா, 'இரண்டு தோல்விகளுக்குப் பின்னர் நாங்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்தியமைக்கு இறைவனுக்கு நன்றி. தட்டையான விக்கெட்டில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயற்பட்டோம். துடுப்பாட்டத்தில் நாங்கள் பிரகாசிக்கவில்லை என நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அதனால்தான் நிஷான் மதுஷ்கவை நாங்கள் அணியில் இணைத்தோம். இந்த வருடமும் ஏதாவது விசேடமாக செய்ய முடியும் என உணர்கிறேன்' என்றார்.

இதேவேளை, 'நாங்கள் எமது துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தோம். ஆனால், மத்திய ஓவர்களில் அதனைத் தொடர முடியாமல் போனது. எங்களால் சிறப்பாக நிறைவு செய்ய முடியாமலும் போனது. நாங்கள் எமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தபோது 180 முதல் 190 ஓட்டங்கள்வரை பெறலாம் என எதிர்பார்த்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தோம். தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அத்துடன் 100 வீதம் செயற்பட்டு முன்னோக்கி நகர்வோம்' என கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணித் தலைவர் பாபர் அஸாம் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க, பாபர் அஸாம் ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெத்தும் நிஸ்ஸன்க (36), பாபர் அஸாம் (24), நுவநிது பெர்னாண்டோ (2), இப்திகார் அஹ்மத் (2) ஆகிய நால்வரும் ஆட்டம் இழந்தனர். (69 - 4 விக்.)

லஹிரு உதார (29), மொஹமத் நவாஸ் (27) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.

லஹிரு உதார ஆட்டம் இழந்த பின்னர் மொஹமத் நவாஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

சாமிக்க கருணாரட்ன 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

147 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 14.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

அணிக்கு மீளழைக்கப்பட்ட நிஷான் மதுஷ்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி ரஹ்மானுல்லலா குர்பாஸுடன் 32 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

குர்பாஸ் 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் களம்புகுந்த சரித் அசலன்க 12 ஓட்டங்களை மாத்திரம் பெற்று களம் விட்டகன்றார்.

தொடர்ந்து திசர பெரேரா 17 ஓட்டங்களுடனும் நிஷான் மதுஷ்க 46 ஓட்டங்களுடனும் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர். (128 - 4 விக்.),

எனினும் தௌஹித் ஹ்ரிடோய் (14 ஆ.இ.), டேவிட் மில்லர் (1 ஆ..இ.) ஆகிய இருவரும் இணைந்து வெற்றி இலக்கை கடக்க உதவினர்.

பந்துவீச்சில் நசீம் ஷா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19