வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10000 பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தமிழ் பேசும் மக்கள் அலைந்து திரிவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சகல வெளிநாடு தொழில்களுக்காக சென்று இருக்கும் பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரணங்கள் (10000 ரூபாய் பெறுமதியான பொதி) கொடுக்கப்படும் என கூறி இப்பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மூலம் விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக்கபப்பட்டிருந்தன.
பின்னர் தமிழ் மொழி மூலம் வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் என கூறி சில அலுவலகர்கள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு தனிச்சிங்கள மொழி மூல விண்ணப்ப படிவங்களை வழங்கி உடனடியாக பூர்த்தி செய்து தரவேண்டும் என வற்புறுத்துவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM