(எம்.மனோசித்ரா)
நாட்டின் 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தாபிக்கப்பட்டுள்ள, இலங்கை மத்திய வங்கியின் திணைக்களமாக இயங்குகின்ற நிதிசார் உளவறிதல் பிரிவால் பணம் தூய்தாக்கல், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் மற்றும் சட்டத்தில் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளிப்புக்களை தடுப்பதற்காக சர்வதேச தரக்கட்டளைகளை தயாரிக்கின்ற சர்வதேச அரசாங்கங்களுக்கிடையிலான நிதிச்செயலாற்றுகை செயலணி, அனைத்து நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 40 பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கமைய இலங்கை, நிதிச்செயலாற்றுகை செயலணியின் பரிந்துரைகளுக்கமைவாக செயற்படுகின்றதா என்பதை நிதிச்செயலாற்றுகை செயலணியின் பிராந்திய நிறுவனமான பணம் தூய்தாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் வலயக் குழுவால் மதிப்பிடப்படும். குறித்த குழுவால் மேற்கொள்ளப்படும் பரஸ்பர மதிப்பீடு 2025 மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்காக மிகச்சிறந்த முறையில் இலங்கையின் நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் 2023 - 2028 பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களை முறியடிப்பதற்கான இலங்கையின் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் பணம் தூய்தாக்கல் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல்களைத் தடுத்தல் பற்றி அடையாளங் காணப்பட்டுள்ள பலவீனங்களுக்கு தீர்வுகளாக அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உள்ளடங்கியதான செயற்பாட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM