உடல் எடையை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

08 Aug, 2023 | 10:07 PM
image

இன்றைய நிலையில்  ஆண்களும், பெண்களும் சம வாய்ப்புகளைப் பெற்று பணிகளை செய்து, வருவாய் ஈட்டுகின்றனர். இதனால் வாழ்க்கை நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக உணவு முறை மற்றும் உடல் எடை பராமரிப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. 

இளம் பெண்களும், ஆண்களும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் ருசியான சுவைக்கு முன்னுரிமை அளித்து, அகால வேளையில் அதிக அளவு உணவுகளை பசியாறுவதால் அவர்களின் உடல் எடை இயல்பான அளவைவிட கூடுதலாக அதிகரிக்கிறது. 

இந்நிலையில் இவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் வைத்தியர்களின் ஆலோசனையை பெற்று உணவு முறையில் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ள தொடங்குகிறார்கள். 

ஆனால் பலருக்கு இதனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு உடல் எடை குறைவதில்லை. இந்நிலையில் உடல் எடையை குறைக்க பாடி ஸ்கல்ப்டிங் எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றைய திகதியில் எம்முடைய பெண்மணிகள் பலரும் திருமணத்திற்கு பிறகு தங்களது வயிற்றுப் பகுதியில் உருவாகியிருக்கும் கூடுதல் சதையை அகற்ற கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்ட பிறகும்.. அவை எதிர்பார்த்த அளவிற்க்கு குறைவதில்லை. 

மேலும் சில பெண்மணிகளுக்கு பிரசவத்திற்குப் பிறகு அவர்களின் கை மற்றும் தொடை பகுதியில் கூடுதல் கொழுப்பு சேர்ந்து விடும். இதனையும் அவர்களால் குறைக்க இயலாமல் போராடுவர். இவர்களுக்கு பாடி ஸ்கல்ப்டிங் எனப்படும் நவீன தொழில்நுட்பம் முழுமையான நிவாரணத்தை அளிக்கிறது. அதிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இத்தகைய பாடி ஸ்கல்ப்டிங் தொழில்நுட்பத்தில் மூன்று வகையினதான தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், இவை குறைவான பக்க விளைவுகளுடன் நிறைவான பலன்களை அளிக்கிறது.

அதிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாடி ஸ்கல்ப்டிங் எனப்படும் தொழில் நுட்பக் கருவியில் HICFEM எனும் தொழில்நுட்பமும், Radio Frequency எனும் தொழில்நுட்பமும், Electro Muscle Stimulation எனும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. 

இதன் மூலம் எம்முடைய உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக இருக்கிறதோ.. அங்கு இந்த கருவி பொருத்தப்பட்டு அங்குள்ள கொழுப்பு அகற்றப்படுகிறது. மேலும் இத்தகைய கருவியின் மூலம் செலுத்தப்படும் அதிர்வலைகளால் கொலாஜனின் உற்பத்தி சீரமைக்கப்படுகிறது. இவை தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. 

ஸ்டிமுலேஷன் எனப்படும் தூண்டல் சிகிச்சையின் மூலம் எம்முடைய தசைப்பகுதி வலுப்படுத்தப்படுகிறது. இதனால் எம்முடைய உடல் எடை மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்புகிறது. இத்தகைய சிகிச்சையின் மூலம் மூளைக்குச் செல்லும் ரத்த குழாய்கள் விரிவடைந்து, அங்கு ரத்த ஓட்டம் சீர்படுத்தப்படுகிறது. இதனால் மூளையின் இயங்கு திறன் முழுமையாக செயல்பட்டு, எம்முடைய உடல் எடையினை சீராக பராமரிப்பதற்கான சாத்தியக்கூறு உருவாகிறது.

பிரசவத்திற்குப் பிறகு சில பெண்களுக்கு அவர்களின் நரம்புகளின் செயல்பாடுகளில் சமச்சீரற்ற தன்மை ஏற்படுகிறது. அதனை இத்தகைய பாடி ஸ்கல்ப்டிங் எனப்படும் நவீன தொழில்நுட்ப சிகிச்சையின் மூலம் நிவாரணத்தை அளிக்கலாம். அத்துடன் உடல் எடையையும் ஆரோக்கியமாக பேண இயலும்.

டொக்டர் வேணி 

தொகுப்பு அனுஷா

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20
news-image

“நல்ல மருத்துவர்” என்பவர் யார்?

2024-09-08 11:16:04
news-image

குழந்தைகளின் இதய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2024-08-31 16:55:30