தந்தையின் ஆலோசனை காரணமாகவே தான் எல்பிஎல் போட்டிகளில் விளையாடியதாக பாக்கிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெறும் குளோபல் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவது குறித்தே தான் ஆர்வம் கொண்டிருந்ததாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்தவேளை தான் கனடா போட்டிகளில் விளையாடுவது குறித்த விருப்பத்தை தந்தையிடம் வெளியிட்டதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 25 நாட்கள் விளையாடினால் கிடைக்கும் பணத்தை கனடாவி;ல் பத்து நாட்கள் விளையாடினால் உழைக்க முடியும் என தந்தையிடம் தெரிவித்ததாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இதனை உறுதி செய்துள்ள பாபர் அசாமின் தந்தை அசாம் சித்தீக் ஆசிய கிண்ணப்போட்டிகளை இலங்கையில் விளையாடவேண்டியுள்ளதாலும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளை இலங்கையில் விளையாடவுள்ளதாலும் கனடாவில் விளையாடுவதை விட இலங்கையில் விளையாடுவதே புத்திசாலித்தனம் என தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவரால் கனடாவில் பத்து நாட்கள் விளையாடிவிட்டு 15 நாட்கள் ஓய்விலிருந்திருக்க முடியும்,எனினும் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டிகள் மற்றும் ஆசிய கிண்ணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலங்கையின் மைதானங்களி;றகு பழகுமாறு அவரை கேட்டுக்கொண்டேன் என பாபசர் அசாமின் தந்தை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM