56 மதகுருமார்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் - நீதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

08 Aug, 2023 | 05:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சிறுவர்  மற்றும் பாலியல் வன்கொடுமை, நிதி மோசடி, புதையல் தோண்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புப்பட்டுள்ள 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023 ஜூன் 01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு 56 மதகுருமார்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து குருமார்கள், 02 மௌலவிகள் கைதிகள் என்ற அடிப்படையிலும், 19 பௌத்த தேரர்களும், 01 கத்தோலிக்க மதகுருக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 19 பௌத்த தேரர்களும், ஒரு இந்து குருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பெண் பாலியல் குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்களும் சிறையில் உள்ளார்கள். கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் பெண் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இல்லை.

அத்துடன், மனித படுகொலை குற்றச்சாட்டில் 2 பௌத்த தேரர்களும் 01 இந்து குருக்களும் உள்ளனர். 01 கத்தோலிக்க மத குரு சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும், 1 இந்து மதகுருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர். கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 02 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளார்கள்.

இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த குற்றச்சாட்டுக்குள் உள்ளடங்கப்படவில்லை. சிறு வயது பிள்ளைகள், ஆண் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 20 பௌத்த தேரர்களும், 01 இந்து மதகுருக்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் 48 பௌத்த தேரர்களும் , 03 இந்து குருக்களும், 01 மௌலவிகளும், 04 கத்தோலிக்க மதகுருமார்களும் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20