யாழில். வாகனத்தை கொள்வனவு செய்து காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது

08 Aug, 2023 | 11:55 AM
image

ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்த நபர் ஒருவர், பணத்திற்கு பதிலாக காசோலையை கொடுத்துள்ளார். 

வாகனத்தினை விற்ற நபர், காசோலையை வங்கியில் வைப்பிலிட்ட போது, அந்த கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது. 

வாகனத்தை வாங்கிய நபர், வாகனத்தோடு தலைமறைவாகி இருந்த நிலையில், வாகனத்தை விற்றவர் அது தொடர்பில், யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காசோலை மோசடி செய்தவரை சுமார் ஓராண்டு கால பகுதிக்கு பின்னர் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் வாங்கிய வாகனம் மாவிட்டபுரம் பகுதியில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் மின்னொழுக்கு ஏற்பட்டு வாகனம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேகநபரை யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் அதீத போதையுடன் இரு மாணவர்கள்...

2025-01-16 11:27:34
news-image

யாழில் செப்பு கம்பிகளுக்காக அறுக்கப்படும் தொலைபேசி...

2025-01-16 11:26:55
news-image

மது போதையில் தகராறு ; ஒருவர்...

2025-01-16 11:04:14
news-image

மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு...

2025-01-16 10:34:21
news-image

சீனாவில் முதலீட்டு அமர்வில் ஜனாதிபதி பங்கேற்பு

2025-01-16 11:25:51
news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10