(நெவில் அன்தனி)
கோல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற லங்கா பிறிமியர் லிக் 10ஆவது போட்டியில் பாபர் அஸாம் குவித்த அபார சதத்தின் உதவியுடன் கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஒரே ஒரு பந்து மீதமிருக்க 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இப் போட்டியில் சதம் குவித்ததன் மூலம் இருபது 20 கிரிக்கெட்டில் 10 சதங்களை பாபர் அஸாம் பூர்த்தி செய்துள்ளார். இருபது 20 கிரிக்கெட்டில் கிறிஸ் கேல் குவித்துள்ள 23 சதங்களுக்கு அடுத்ததாக 10 சதங்கள் குவித்த இரண்டாவது வீரரானார் பாபர் அஸாம்.
கோல் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்க, பாபர் அஸாம் ஆகிய இருவரும் 75 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து உறுதியான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
நிஸ்ஸன்க 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் களம் புகுந்து 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற நுவனிது பெர்னாண்டோ 2ஆவது விக்கெட்டில் பாபர் அஸாமுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 166 ஓட்டங்களாக உயர்த்தினார்.
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 59 பந்துகளில் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களைக் குவித்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸின் வெற்றிக்கு கடைசி 5 பந்துகளில் 14 ஓட்டங்கள் தெவைப்பட்டது. மொஹமத் நவாஸ் 4 பந்துகளில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டறி உட்பட ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசை வீரர்கள் நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 அல்லது 30க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்திருந்தனர். ஆனால் அவை அனைத்தும் பாபர் அஸாமின் சதத்தினால் வீண்போனது.
துடுப்பாட்டத்தில் டிம் சீஃபேர்ட் 35 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 54 ஓட்டங்களையும் ஷெவொன் டெனியல் 49 ஓட்டங்களையும் லசித் குரூஸ்புள்ளே 36 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ச 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
லசித் குருஸ்புள்ளே, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ச, டிம் சீஃபேர்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
ஆட்டநாயகன்: பாபர் அஸாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM