வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் இன்று காலை 11.00மணி தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பஸ் நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

உரிய தீர்வு கிடைக்கவிடில் தற்போது வடமாகாண ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள எமது பணிப்பகிஷ்கரிப்பு இலங்கை முழுவதுமான  பணிப்பகிஷ்கரிப்பாக மாற்றமடையும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஷ்வரனின் கொடும்பாவியினை எரிக்கவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்த எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.