கசக்கும் உறவு

07 Aug, 2023 | 04:13 PM
image

கார்­வண்ணன்

2024ஆம் ஆண்டு தேர்­தல்­களின் ஆண்­டாக இருக்கும் என்று ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நெருக்­க­மான ருவன் விஜே­வர்த்­தன கூறி­யி­ருக்கும் நிலையில், கொழும்பு அர­சி­யலில் சல­ச­லப்­புகள் தோன்­றி­யி­ருக்­கின்­றன. ஏற்­கெ­னவே மாகாண சபைத் தேர்­தல்கள் நடத்தப்­ப­டாமல் உள்­ளது. அதற்குப் பின்னர் உள்­ளூ­ராட்சி சபை­களின் பத­விக்­காலம் காலா­வ­தி­யாகி, அவையும் தேர்­த­லுக்­காக காத்­தி­ருக்­கின்­றன.

அடுத்த ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். ஆக மூன்று தேர்­தல்கள் அடுத்த ஆண்டு நடத்­தப்­பட வாய்ப்­புகள் உள்­ளன.

மாகாண சபை­களின் பத­விக்­காலம் காலா­வ­தியாகி பல ஆண்­டு­க­ளா­கியும் தேர்தல் நடத்­தப்ப­டாமல் காலம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கி­றது.

உள்­ளூ­ராட்சி சபை­களின் நிலையும் அதுதான். இவற்­றுக்­கான தேர்­தலை அடுத்த ஆண்டு நடத்த முடி­யாமல் போனாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை. ஆனால், ஜனா­தி­பதி தேர்­தலை அடுத்த ஆண்டில் நடத்­தாமல் இருக்க முடி­யாது.

கடை­சி­யாக 2019 நவம்­பரில் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட்­டது. எனவே, அடுத்த ஆண்டு ஒக்டோ­பர்­ அல்­லது அதற்கு முன்­ன­தாக ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்­டி­யி­ருக்கும்.

எப்­ப­டி­யா­வது இன்னும் ஒரு வருட காலமே இருக்கும் நிலையில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான முன்­னா­யத்­தங்­களை அர­சியல் கட்­சிகள், கூட்­ட­ணிகள் இப்­போதே தொடங்கிவிட்­டன.

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் பிர­தான போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. 2005 ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவிடம் அவர் தோல்­வி­ய­டைந்தார். அப்­போது தமிழ்­மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்தால் அவர் ஜனா­தி­ப­தி­யாகியிருந்­தி­ருப்பார். ஆனால் தமிழ் மக்கள் அவரை ஆத­ரிக்கத் தயா­ராக இருக்­க­வில்லை.

அதற்குப் பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடக் கூட வாய்ப்பே கிடைக்­க­வில்லை.

2010இல் மஹிந்­த­வுக்கு எதி­ராக சரத் பொன்­சேகா பொது வேட்­பா­ள­ராக எதிர்க்­கட்­சி­களால் நிறுத்­தப்­பட்டார்.

2015இலும் அதுதான் நடந்­தது. மஹிந்­தவைத் தோற்­க­டிப்­ப­தற்­காக அப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன களத்­துக்கு கொண்டு வரப்­பட்டார். 2019இல் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின் தள்ளிக் கொண்டு சஜித் பிரே­ம­தாச முன்­னி­லைக்கு வந்­ததால், வேறு வழி­யின்றி அவரை வேட்­பா­ள­ராக ஏற்றுக்கொள்ள வேண்­டிய நிலைக்கு ரணில் தள்­ளப்­பட்­டி­ருந்தார். ஆனாலும் ஜனா­தி­பதி வேட்­பாளர் கனவு உள்­ளுக்குள் புகைந்து கொண்­டி­ருந்­தது. கோட்­டா­பய ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்ச்சி அவ­ருக்கு கை கொடுக்க, யாரை எதிர்த்து அர­சியல் செய்­தாரோ, அவர்­களின் தய­வி­னா­லேயே ஜனா­தி­பதி ஆனார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஆத­ர­வுடன் ஜனா­தி­பதி பத­வியில் ஒரு வரு­டத்தை கழித்துவிட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு இப்­போது சோத­னைக்­காலம் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

கடந்த ஆண்டு நடுப்­ப­கு­தியில் கோட்­டாவின் ஆட்­சிக்கு எதி­ராக-ராஜபக்ஷவி­னரின் அதி­கா­ரத்­துக்கு எதி­ராக நாட்டில் தோன்­றிய எதிர்ப்­ப­லை­களைச் சமா­ளிக்க முடி­யாமல், சிலர் நாட்டை விட்டு ஓடி­னார்கள். இன்னும் சிலர் படைத்­த­ளங்­க­ளுக்குள் பதுங்கிக் கொண்­டார்கள்.

அப்­போது, அவர்கள் தங்­களின் ஆட்­சியை காப்­பாற்றிக் கொள்ள முடி­யாத நிலையில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஆட்சியை ஒப்­ப­டைத்­தனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சியல் எதி­ரி­யாக இருந்­தாலும், அவர் நாடா­ளு­மன்­றத்தில் ஒற்றை ஆசனத்தை மட்டும் கொண்­டி­ருப்­பவர் என்பதால் தங்­க­ளுக்கு போட்­டி­யாக வர­மாட்டார் என்ற கணிப்பு ராஜபக்ஷவி­ன­ருக்கு இருந்­தது.

அதை­விட, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தங்­களை பாது­காத்துக்கொள்வார் என்ற நம்­பிக்­கையும் அவர்­க­ளிடம் இருந்­தது.

அந்த நம்­பிக்­கையை ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெரும்­பாலும் காப்­பாற்­றி­யி­ருக்­கிறார். அதா­வது ராஜபக்ஷவி­னரை பாது­காத்­தி­ருக்­கிறார். ஆனால், தங்­க­ளுக்குப் போட்­டி­யாக இருக்­க­மாட்டார் என்ற கணிப்பை அவர் மெய்­யாக்­கி­யி­ருக்­கி­றாரா என்­பது சந்­தேகம்.

ஏனென்றால், கோட்டா ஆட்­சியின் வீழ்ச்­சிக்குப் பின்னர் பொது­ஜன பெர­முன கட்சி இப்­போது தன்னைப் புதுப்­பித்துக் கொள்ள முயற்­சிக்­கி­றது.

மீண்­டெ­ழுந்து ஆட்­சியைப் பிடிக்க திட்டம் போடு­கி­றது. ராஜபக்ஷவி­னரின் தீவிர விசு­வா­சிகள் பலரும், மீண்டும் மொட்டு ஆட்சி மலரும், ராஜபக்ஷவினர் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரு­வார்கள் என்று பிர­சாரம் செய்யத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். விரைவில் ராஜபக்ஷவி­னரின் ஆட்சி மலரும் என்று நாமல் ராஜபக்ஷவும் கூட கூறி­யி­ருக்­கிறார்.

ஆக, தேர்தல் ஆண்டை எதிர்­கொள்­வ­தற்கு மொட்டு அணி தயா­ராகிக்கொண்­டி­ருக்­கி­றது. ஆனால் அவர்­க­ளுக்கு முளைத்­தி­ருக்­கின்ற புதிய சிக்கல் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான். ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில், அவரைச் சூழ ஒரு அணி தயா­ராகி வரு­கி­றது.

ஏற்­க­னவே ஐ.தே.­க.வின் தலைவர் என்ற வகையில் அவ­ருக்குப் பின்னால் இருப்­ப­வர்கள் அல்ல அவர்கள். அவர்கள் மொட்டு கட்­சியின் ஊடாக நாடா­ளு­மன்­றத்­துக்கு வந்­த­வர்கள். பொது­ஜன பெர­மு­னவின் ஆரம்ப­கால உறுப்­பி­னர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்கள் தான், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வாக திரளத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். ஏற்­க­னவே ராஜபக் ஷவி­னரின் தலை­மைத்­து­வத்தை வெறுத்து. மொட்­டுக்குள் ஒரு பிரிவு ஏற்­பட்­டது.

டலஸ் அழ­கப்­பெ­ரும, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில போன்­ற­வர்கள், மொட்டு கூட்­ட­ணியில் இருந்து விலகிச் சென்­றார்கள்.

இந்தப் பிளவு பொது­ஜன பெர­மு­னவின் கூட்­டணி பலத்தை சிதைத்­தி­ருந்­தாலும், மொட்­டுவின் அடிப்­படை கட்­ட­மைப்பில் பெரிய சிதைவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

இப்­போது, நிமல் லான்­சாவின் தலை­மையில் இன்­னொரு புதிய கூட்­டணி உரு­வாகிக் கொண்­டி­ருக்­கி­றது.

மஹிந்த அம­ர­வீ­ரவின் இல்­லத்தில் நடந்த கலந்­து­ரை­யா­டலில், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மூத்த தலை­வர்­க­ளாக இருந்த நிமல் சிறி­பால டி சில்வா, லசந்த அழ­கி­ய­வன்ன, துமிந்த திசா­நா­யக்க, ஜோன் சென­வி­ரத்ன, சுசில் பிரே­ம­ஜ­யந்த உள்­ளிட்ட பலர் கலந்துகொண்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன.

இந்த அணி­யினர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ரிப்­ப­தற்­காக தயா­ராகி வரு­கின்­றனர்.

ராஜபக்ஷவி­ன­ருடன் கொண்­டுள்ள அதி­ருப்தி அல்­லது அவர்கள் மீது மக்கள் மத்­தியில் காணப்­படும் அதி­ருப்­தியைக் கருத்தில் கொண்டு, ரணில் விக்கிர­ம­சிங்­கவின் பக்கம் சாய்­வ­தற்கு இவர்கள் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் தற்­போது அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கின்ற முன்­னைய ராஜபக்ஷ விசு­வா­சிகள் பலரும் கூட, ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் அடுத்த ஜனா­தி­பதி என்று கூறி வரு­கி­றார்கள்.

அவர்கள், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைத் தான் ஆத­ரிக்க வேண்டும் என்று பொது­ஜன பெர­முன தலை­மைக்கு மறை­முக அழுத்­தங்­களைக் கொடுக்க முனை­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் தான், நிமல் லன்­சாவின் தலை­மையில் மொட்­டுக்குள் மற்­றொரு பிளவு உரு­வாகி வரு­கி­றது.

இந்தப் பிளவைத் தடுப்­ப­தற்கு, பசில் ராஜபக்ஷ மேற்­கொண்ட முயற்­சிகள் பல­ன­ளிக்­க­வில்லை  என்றும் கூறப்­ப­டு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொது­ஜன பெர­முன தனக்கு ஆத­ர­வ­ளிப்­பதை தவிர்க்க முடி­யாத ஒரு சூழலை உரு­வாக்க விரும்­பு­கி­றாரா என்ற சந்­தே­கங்­களும் நில­வு­கின்­றன.

ராஜபக்ஷவி­னரை அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் இருந்து, ஒதுக்கி வைக்­கவே ரணில் முயற்­சிக்­கிறார். ராஜபக்ஷவி­னரும் தங்­களை மீள­மைத்துக் கொள்ளும் வரை ரணில் அதி­கா­ரத்தில் இருப்­பதே பாது­காப்­பா­னது எனக் கரு­து­கின்­றனர்.

திடீ­ரென ராஜபக்ஷவினர் அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு தயா­ராகு­வதை ரணில் விரும்­பவும் இல்லை,-எதிர்­பார்க்­க­வு­மில்லை. இது தான் அவர்­க­ளுக்­கி­டையில் தற்­போது காணப்­படும் உர­சல்­க­ளுக்குக் காரணம்.

ரணில் இப்போது ராஜபக்ஷவினரின் கடிவாளத்துக்கு கட்டுப்படும் குதிரையாக இல்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ரணில் கூறிய போது, அதற்கு அவருக்கு மக்களாணை இல்லை என்று கூறியிருந்தார் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்.

ரணில் மொட்டுவுக்கு வழங்கப்பட்ட 69 இலட்சம் மக்களாணையில் ஜனாதிபதியானவர் என்றும், அவர் பெரமுனவின் கொள்கை மற்றும் தீர்மானங்களுக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றும் ராஜபக்ஷவினர் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாறாக ரணிலுக்கும் ராஜபக்ஷவினருக்கும் இடையிலான உறவு மெல்ல மெல்ல கசக்கத் தொடங்கியிருக்கிறது.

இது அடுத்த ஜனாதிபதி தேர்தலிலுக்கிடையில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களும் அவர்களின் வெற்றி தோல்வியும் தீர்மானிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்களமயமாக்கலும் தொல்லியல் திணைக்களமும் : 2026இன்...

2026-03-05 11:58:28
news-image

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைதும்...

2026-03-05 11:39:14
news-image

இலங்கையின் சனத்தொகை மாற்றம் எதிர்கால மனிதவளச்...

2026-03-04 12:02:41
news-image

இறந்தவர்களை மறக்க முடியவில்லை

2026-03-03 12:35:17
news-image

ஈரானின் பாதுகாப்பு பலவீனங்களும் காமேனியின் இறுதி...

2026-03-03 11:40:52
news-image

ஈரான் உச்ச தலைவர் அலி காமனெயி...

2026-03-03 10:55:15
news-image

ஆசியாவில் பொருளாதார நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள மத்திய...

2026-03-03 10:32:52
news-image

அழுத்தம், பதற்­றத்தை குறைத்து மன உறு­தியை...

2026-03-02 10:39:34
news-image

ஆசிய பொருளாதாரத்தை உலுக்கும் ஹோர்முஸ் நீரிணையின்...

2026-03-02 09:56:01
news-image

ஏமாற்­றிய அர­சாங்கம்

2026-03-01 16:09:58
news-image

இலங்­கையில் அமெ­ரிக்­காவின் எதிர்­பார்ப்பு

2026-03-01 16:07:10
news-image

ஆணி அடிக்க அலவாங்கு எதற்கு?

2026-03-01 13:53:56