முஸ்லிம்களின் அபிலாஷைகள் நிறைவேறுமா?

07 Aug, 2023 | 03:27 PM
image

எம்.எஸ்.தீன்

ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­திலும், அதில் தான் வெற்றி பெற வேண்­டு­ம் என்­ப­திலும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கவனம் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்றார். அதற்கமைய தமது வழக்­க­மான பிரித்­தாளும் தந்­தி­ரத்தை கையி­லெ­டுத்­துள்ளார். 

தமி­ழர்­களின் ஆத­ரவை பெற்றுக்கொள்­வ­தற்­காக 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் அதி­காரத்தை தவிர்த்து ஏனைய அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு தயா­ரென்ற சமிக்­கையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். தமிழ் கட்­சி­களும் அது குறித்து கருத்­துக்­களை வெளி­யிட்டுக்கொண்­டி­ருக்­கின்­றன.

இதே­வேளை வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கை­களும் முன்வைக்­கப்­ப­டு­கின்­றன. 'தமி­ழர்­க­ளுக்­கான தீர்வு கிடைக்­க­வில்லை என்றால் வடக்கு, கிழக்கை இந்­தி­யாவின் ஒரு பகு­தி­யாக இணைக்க வேண்­டு­மென கோர வேண்டும். அதன் மூல­மாகவே தமி­ழர்­களின் இறை­யா­ண்மையை பாதுகாக்க முடியும்' என அண்­மையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் கருத்துத் தெரி­வித்­துள்ளார்.

இத­னி­டையே சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான இன­வாதக் கருத்­துக்­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்கும் அத்­து­ர­லிய ரத்ன தேரர் 13ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி எடுக்கும் நட­வ­டிக்­கை­களில் மகா­நா­யக்க தேரர்கள் தலை­யீடு செய்ய வேண்­டு­மென்றும், ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ், சிங்­கள இன முரண்­பாட்டை தோற்­று­விக்க முயற்­சிக்­கின்றார் என்றும் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு வடக்கு, கிழக்கு இணைப்பு, 13ஆவது திருத்த அமு­லாக்கம் தொடர்பில் பல்வேறு கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டுக்கொண்டிருக்கும் இன்­றைய அர­சியல் சூழலில் முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த விட­யத்தில் எதுவித கருத்­துக்­களையும் முன்வைக்­கா­தி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது.

13ஆவது திருத்தத்தை அமுல்­ப­டுத்­து­வதும், வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­ப­டு­வதும் ஒரு போதும் நடை­பெ­றா­தென்று வழக்­க­மாக இருப்­பது போன்று இனியும் இருக்க முடி­யாது. அவ்­வாறு இருப்­பது கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­க­ளையும், எதிர்­கா­லத்­தையும் குழி தோண்டி புதைப்­ப­தற்கு அத்­தி­வா­ர­மிடும் ஒன்­றா­கவே அமைந்­து­விடும்.

13ஆவது திருத்த அமு­லாக்கத்தை முஸ்­லிம்­களும் வர­வேற்க வேண்டும். ஆனால், வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­ப­டு­வது என்­பது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­க­ளையும், அர­சியல் அதி­கா­ரத்­தையும் இல்­லாமல் செய்­து­விடும். இந்­நாட்டில் அர­சியல் அதி­கா­ர­மற்­ற­தொரு சமூ­க­மாக முஸ்­லிம்கள் மாறி­வி­டு­வார்கள்.

ஆதலால், 13ஆவது திருத்தத்தில் உள்ள அதி­கா­ரங்­கள் அமு­லாக்கம் செய்­யப்­பட்டு, வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­ப­டு­மாயின் அது கிழக்கு மாகா­ணத்தில் உள்ள முஸ்லிம்களின் இன விகி­தா­சா­ரத்தில் பாரிய வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும். கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்கள் சுமார் 38 வீத­மாக உள்­ளார்கள். அதனால், கிழக்கு மாகா­ணத்தின் அர­சியல் அதி­கா­ரத்தை தேர்தல் ஒன்றின் மூல­மாக பெற்றுக்கொள்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கள் உள்­ளன. ஆனால், கிழக்கு வடக்­குடன் இணைக்­கப்­ப­டு­மாயின் முஸ்­லிம்­களின் இன­வி­கி­தா­சாரம் சுமார் 17 வீத­மா­க வீழ்ச்­சி­ய­டையும். இந்த விகி­தத்தால் இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளினால் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முடி­யாது.

ஆகவே, மாகாண ரீதி­யாக ஏனைய இனங்கள் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ளும் போது முஸ்­லிம்­களும் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரி­ய­வாறு ஏற்­பா­டு­களைக் கொண்­ட­தாக இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு அமைய வேண்டும். முஸ்­லிம்­களும் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்­ப­தற்­கா­கத்தான் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் வடக்கும், கிழக்கும் நிரந்­த­ர­மாக இணை­வ­தாக இருந்தால் முஸ்­லிம்­க­ளுக்கும் அர­சியல் அதி­காரம் வழங்­கப்­பட வேண்­டுமென்று நிபந்­தனை விதித்தார்.

வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டு­மாயின் முஸ்­லிம்­களும் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய அதி­கார அலகு ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்றும் மர்ஹும் அஷ்ரப் தெரி­வித்­தி­ருந்தார்.

ஆகவே, வடக்கும், கிழக்கும் இணை­வதா அல்­லது பிரி­வதா என்­பது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­யல்ல. இதில் எது நடந்­தாலும் முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் இருக்க வேண்டும். அதற்­கு­ரிய ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்­டு­மென்­பதே முஸ்­லிம்­களின் விருப்­ப­மாகும்.

கிழக்கு மாகா­ணத்தில் மாத்­தி­ரம்தான் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யுடன் உள்­ளார்கள். ஏனைய மாகா­ணங்­களில் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே உள்­ளார்கள். கிழக்கு மாகா­ணத்துக்கு வெளியே ஒரு உள்­ளூ­ராட்சி சபையின் அதி­கா­ரத்தைக் கூட தனியே முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் பெற்றுக்கொள்ள முடி­யாத அள­வுக்கு சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கின்­றார்கள். வடக்கும் கிழக்கும் இணையும்போது முஸ்­லிம்கள் எல்லா மாகா­ணங்­க­ளிலும் சிறு­பான்­மை­யி­ன­ராகவே இருப்­பார்கள்.

அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கல்­முனை, சம்­மாந்­துறை, பொத்­துவில் ஆகிய 3 தொகு­தி­க­ளையும் இணைத்து கரை­யோர மாவட்­ட­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு முஸ்­லிம்கள் 1979ஆம் ஆண்டிலிருந்து முயற்­சி­களை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

முஸ்­லிம்­களின் இந்த கோரிக்­கையை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன தலை­மை­யி­லான அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. ஆனால், அதனை அமைப்­ப­தற்கு அப்­போது அமைச்­ச­ராக இருந்த பீ.தயா­ரட்­னவும், தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் கடும் எதிர்ப்­புக்­களை காட்­டி­னார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டு­மென்று கூறிக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், அமைப்­புக்­களும் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கரை­யோர மாவட்­டத்­திற்கு இன்­று­வரை எதிர்ப்­புக்­களை தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கரை­யோர மாவட்டம் உரு­வாக்­கப்­பட்டால் தமி­ழர்கள் சிறு­பான்­மை­யி­ன­ராகி விடு­வார்கள். முஸ்­லிம்­க­ளினால் ஆளப்­ப­டு­வார்கள் என்­றெல்லாம் கருத்­துக்­கள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. அம்­பாறை மாவட்­டத்தில் இன்றும் தமி­ழர்கள் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே இருக்­கி­றார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டு­மென்று தெரி­விப்­ப­வர்கள் அப்படி இணைந்தால் முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­ப­டு­வார்கள் என்பதை பற்றியும் சிந்­திக்க வேண்டும். முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கரை­யோர மாவட்டம் தமி­ழர்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ராக அமையும் என்றால், தமி­ழர்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட இணைந்த வடக்கு, கிழக்கில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கி­விடும் முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­க­ள் குறித்தும் சிந்திக்க வேண்டும். அதற்­கு­ரிய ஏற்­பா­டு­களைச் செய்­யாமல் வெறு­மனே வடக்­குடன், கிழக்கை இணைக்க கோரிக்­கை­களை முன் வைப்­பதை முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கு எதி­ரான கோரிக்­கை­யா­கவே பார்க்­கின்­றார்கள்.

முஸ்லிம் கட்­சி­களும், அவற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்­றியோ, கரை­யோர மாவட்­டத்தைப் பற்­றியோ, இனப் பிரச்­சினைத் தீர்வில் முஸ்­லிம்­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்றோ எந்தக் கோரிக்­கை­க­ளையும் முன் வைக்­கா­து வழமைபோல் மெளனம்  காக்கின்றனர். இன்று முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் ரகசியமாக நெருக்­க­மான உறவை வைத்­துள்­ளார்கள்.   இதனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டு­மென்று தெரி­வித்­தாலும், முஸ்­லிம்­க­ளுக்கு மாகாண ரீதியில் அர­சியல் அதி­காரம் தேவை­யில்லை, முஸ்­லிம்­களை மத்­திய அர­சாங்கம் பார்த்துக் கொள்ளும் என்றாலும் கூட அதற்கு ஆத­ரவு வழங்கும் நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ளார்கள்.

13ஆவது திருத்தம் , வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி பேசப்­படும் இன்­றைய நிலையில், பாரா­ளு­மன்ற தேர்தல் 2024 ஜன­வ­ரியில் நடக்­கு­மென்று தெரி­விக்­கப்­ப­டு­மாயின் முஸ்லிம் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், தலை­வர்­களும் முஸ்­லிம்­களின் உணர்ச்­சி­களை தூண்டும் வகை­யிலும், முஸ்­லிம்­களை ஒரு போதும் நாங்கள் கைவி­ட­மாட்டோம் என்றும் கருத்­துக்­களை தெரி­விப்பார்கள். முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் தேர்தல் காலங்­களில் மாத்­திரம் தலை­வர்­க­ளா­கவும், பாது­கா­வ­லர்­க­ளா­கவும் போலியான போர்வையை போர்த்திக் கொள்­வார்கள். முஸ்லிம் வாக்­கா­ளர்­களும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு வாக்­கு­களை வழங்­கு­வார்கள். தேர்தல் வாக்­கெ­டுப்பு முடிந்த கையுடன் முஸ்­லிம்­களை முஸ்லிம் கட்­சி­களும் தலை­வர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வழமைபோல் கைவிட்­டு­வி­டு­வார்கள்.

முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் அதி­காரம், இருப்பு, பாது­காப்பு, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு, அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வது போன்­ற­வற்­றில் கொள்கை இருக்க வேண்டும். அதனை யாருக்­கா­கவும் மாற்றக் கூடாது. அக்­கொள்­கைகள் முஸ்லிம் சமூகத்திற்கானதாக இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி விடயங்களில் எந்தவொரு கொள்கையுமில்லாது இருக்கின்றார்கள். காலத்திற்கு காலம் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது, அமைச்சர் பதவிகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்வது, தங்களையும் தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆமாம் சாமி கும்பல்களையும் செல்வந்தர்களாக்குவதனையே உறுதியான கொள்கையாகக் கொண்டுள்ளார்கள். இத்தகையவர்கள் உள்ளவரை முஸ்லிம்கள் தமது அபிலாஷைகளை அடைய முடியாது. 

ஒரு சமூகம் தமது அபிலாஷைகளை அடைய வேண்டுமாயின் நல்ல தலைவர்கள் தலைமை வகிக்க வேண்டும். தலைவர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் இருந்தால் மாத்திரமே ஒரு சமூகத்தினால் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இன்று முஸ்லிம்களுக்கு தலைவர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களை நல்லவர்கள், வல்லவர்கள் என்று அழைக்க முடியாதவாறே அவர்களின் கொள்கைகள் உள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்களமயமாக்கலும் தொல்லியல் திணைக்களமும் : 2026இன்...

2026-03-05 11:58:28
news-image

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயின் கைதும்...

2026-03-05 11:39:14
news-image

இலங்கையின் சனத்தொகை மாற்றம் எதிர்கால மனிதவளச்...

2026-03-04 12:02:41
news-image

இறந்தவர்களை மறக்க முடியவில்லை

2026-03-03 12:35:17
news-image

ஈரானின் பாதுகாப்பு பலவீனங்களும் காமேனியின் இறுதி...

2026-03-03 11:40:52
news-image

ஈரான் உச்ச தலைவர் அலி காமனெயி...

2026-03-03 10:55:15
news-image

ஆசியாவில் பொருளாதார நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ள மத்திய...

2026-03-03 10:32:52
news-image

அழுத்தம், பதற்­றத்தை குறைத்து மன உறு­தியை...

2026-03-02 10:39:34
news-image

ஆசிய பொருளாதாரத்தை உலுக்கும் ஹோர்முஸ் நீரிணையின்...

2026-03-02 09:56:01
news-image

ஏமாற்­றிய அர­சாங்கம்

2026-03-01 16:09:58
news-image

இலங்­கையில் அமெ­ரிக்­காவின் எதிர்­பார்ப்பு

2026-03-01 16:07:10
news-image

ஆணி அடிக்க அலவாங்கு எதற்கு?

2026-03-01 13:53:56