வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறும் கோரி வவுனியா இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இ.போ.ச ஊழியர்கள் நேற்று முதல் வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால்  பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

 
வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேரூந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதன் காரணமாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.