முன்னாள் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவின் மருமகனான  உபுல் சமிந்த குமாரசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.

இவர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா  ரொக்கப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்திற்கு வழங்கியதாக கூறப்படும்  112 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.