வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.

இன்று காலை முதல் வைத்திசாலையில் வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றது.

இதனால் வெளிமாவட்டங்களிலிருந்தும் தூர இடங்களிலிருந்தும் வருகைத்தந்துள்ள நோயாளர்கள் திரும்பிச்சென்றதை அவதானிக்க முடிந்தது.

வெளிநோயாளர் பிரிவு சிகிச்சைப் பிரிவுகள்  பகுதி உட்பட அனைத்து பிரிவுகளும் செயற்படாமையினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.