ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ஓலைக் குடிசையொன்று முற்றாக தீக்கிரையாகியானதில் 7 பேர் கொண்ட குடும்பமொன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ராமலிங்கம் யோகராசா என்பவரின் ஓலைக் குடிசை வீடு இன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்தமையினால் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பராகியுள்ளன. அத்துடன், உடுதுணிகூட இல்லாத நிலையில் 7 பேர் கொண்ட குறித்த குடும்பம் மரத்தின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளது.

அன்றாடம் கூலித் தொழில் செய்து குடும்பத்தை கொண்டுநடத்த முடியாத நிலையில், அயவலர்களிடம் இருந்து கடன் பெற்று குடிசை கட்டி வாழ்ந்ததாகவும் அது இன்று அனைத்தும் சம்பராகியுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனது ஐந்து பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு மிகவும் கஷடத்தின் மத்தியில் வாழ்ந்த எங்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தினால் உறங்குவதற்கு இடமுமில்லை மாற்றுத் துணிகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சிறு பிள்ளைகள் என்பதால் இரண்டு பேர் பாடசாலைக்கு செல்வதாகவும் அவர்களுடைய பாடசாலை புத்தகம் தொடக்கம் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்நிலையில் தங்களின் பாடசாலை கல்வியைத் தொடர உதவிக்கரம் நீட்டுமாறு இரு பாடசாலை மாணவர்களும் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் எவரும் வருகைத்தரவில்லை எனவும் தமது குறைபாட்டை கேட்டு அறிந்து எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட குடும்த்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.