(நெவில் அன்தனி)
பி லவ் கண்டி அணிக்கும் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக்கின் 9ஆவது போட்டியில் வனிந்து ஹசரங்கவின் அற்புதமான சகலதுறை ஆட்ட உதவியுடன் பி லவ் கண்டி அணி 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
அப்போட்டியில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய அணித் தலைவர் வனிந்து ஹசரங்க 22 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் சிறப்பாக பந்துவீசி ஜெவ்னா கிங்ஸின் ஆரம்ப வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (0), சரித் அசலன்க (5) ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து பி லவ் கண்டி அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.
மத்திய வரிசையில் வெல்லாலகே ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்று ஜெவ்னா கிங்ஸ் 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.
அவரை விட ப்ரியமல் பெரேரா (22), டேவிட் மில்லர் (21), தௌஹித் ஹ்ரிடோய் (15) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நுவன் ப்ரதீப் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
118 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி லவ் கண்டி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 13 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பக்கார் ஸமான், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் பக்கார் ஸமானுடன் ஜோடி சேர்ந்த வனிந்து ஹசரங்க அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 2ஆவது விக்கெட்டில் 36 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை சுலபப்படுத்தினர்.
வனிந்து ஹசரங்க 22 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 52 ஓட்டங்களைக் குவித்தார். பக்கார் ஸமான் 42 ஓட்டங்களைப் பெற்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM