முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் ஹெண்டர் வாகனத்தில் வந்திருந்த இராணுவத்தினர் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட பொலிஸார் துணை போகின்றனரா என சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் நானும் அவ்விடத்துக்கு கள விஜயம் செய்தபோது இராணுவத்தினர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
தண்ணிமுறிப்பு - குருந்தூர் மலை பகுதியில் பாதுகாப்பு கடமையில் நிற்கும் இரு பொலிஸார் மண் அகழ்வினை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர். இராணுவத்துக்கு ஒரு சட்டம், மக்களுக்கு இன்னொரு சட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, பொலிஸாரும் சட்ட விரோத மண் அகழ்வுக்கு உடந்தையாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM