(க.கம­ல­நாதன்)

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை வாகன துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கு யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஹெலி­கொப்­டரில் பாரா­ளு­மன்றம்  வரு­வது தெரி­ய­வில்­லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்­பி­யது.

சிறு தவ­றுக்­காக விமல் வீர­வன்ச சிறையில் அடைக்­கப்­ப­டுவதை விடவும்   மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் நேரடித் தொடர்­பு­டைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­ந­ருமே ஒரே சிறையில் அடைக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்றும் தேசிய சங்க சபையின் தலைவர் மாது­று­வோயே தம்­மிஸ்­ஸர தேரர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை பார்­வை­யி­டு­வ­தற்கு  மேற்­படி அமைப்பின் தேரர்கள் வெலிக்­கடை புதிய மெகசின் சிறைச்­சா­லைக்கு நேற்று வருகை தந்­தி­ருந்­த போதே   மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மக்கள் முகம்­ கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­தினால் பிரி­வி­னை­ வாதம் வெகு­வாக தலை­தூக்கி வரு­கின்­றது. 

மறு­பு­றத்தில் எட்கா ஒப்­பந்தம் வாயி­லாக எமது நாட்டை இந்­தி­யாவின் கால­னித்­துவ ஆட்­சிக்கு இலங்­கையை உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். அத்­துடன் நாட்டின் வளங்­க­ளையும்  விற்­பனை செய்து வரு­கின்­றனர். இவை அனைத்தும் சர்­வ­தேச ஏகா­தி­பத்­திய சக்­தி­களின் தேவைக்­கா­கவே செய்­யப்­ப­டு­கின்­றன.

அவ்­வாறு அந்­நிய நாடு­களின் தேவைக்­காக முன்­னெ­டுக்­கப்­படும் இந்த செயற்­பாட்­டிற்கு எதிர்ப்புத் தெரி­விப்­ப­வர்கள் சிறை­யி­லி­டப்­ப­டு­கின்­றனர்.  அதற்­க­மை­யவே விமல் வீர­வன்­சவும் சிறை­யி­லிடப்­பட்­டுள்ளார்.

ஆனால் இந்த வாகன துஷ்­பி­ர­யோக செயற்­பாட்­டுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்ட நபர்கள் இன்று சுதந்­தி­ர­மாக வெளியில் உலா­வு­கின்­றனர்.  அவர்கள் சர்­வ­தேச சக்­தி­களின் தேவை­களை நிவர்த்­திக்க துணை போகின்­றமை தான் அவர்­க­ளுக்கு சுதந்­திரம் கிடைப்­ப­தற்­கான பிர­தான கார­ண­மாகும்.

ஊழ­லுக்கு எதி­ராக இந்த அர­சாங்கம் துரி­த­மாக சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்தும் என்றால்  பட்டப் பகலில் இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்கி பிணை முறி விநி­யோக ஊழல் செயற்­பாட்­டிற்கு  எதி­ராகச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­த­ வேண்டும். அவ்­வாறு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னையும் ஒரே சிறையில் அடைத்­தி­ருக்க வேண்டும்.

அதனை விடுத்து விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் செய்த கடுகளவு தவறுகளுக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டால் மாத்திரம் ஊழல் ஒழிந்து விடப் போவதில்லை. இவ்வாறிருக்க யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினர் விஜயகலா மகேஸ்வரன் பாரா ளுமன்றத்திற்கு ஹெலிகொப்டரில் வரு கின்றார். அது தொடர்பில் ஏன் இந்த அர சாங்கம் கண்டுகொள்வதில்லை என்றனர்.