வைபவ் நடிக்கும் 'ரணம்' படத்தின் டீசர் வெளியீடு

05 Aug, 2023 | 04:57 PM
image

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான வைபவ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ரணம்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷெரிப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'ரணம்'. இதில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ்வதி மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆரோல் கொரோலி இசையமைத்திருக்கிறார். 

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மது நாகராஜன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் தேட வேண்டியது முடிவை அல்ல ஆரம்பத்த  எனும் வசனம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right