அர்ஜுன் தாஸின் 'ரசவாதி' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

05 Aug, 2023 | 08:06 PM
image

நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'ரசவாதி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'மௌனகுரு', 'மகாமுனி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தின் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ரசவாதி'. இதில் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன், ஜி. எம். சுந்தர், சுஜித் ஷங்கர்,  ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

சரவணன் இளவரசு மற்றும் சிவக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். 

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி என் ஏ மெக்கானிக் கம்பெனி எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சாந்தகுமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன் தாஸின் தோற்றமும், முகம் காட்டாத நாயகியின் அர்த்தமுள்ள தோற்றமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்