பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' படத்தின் டீசர் வெளியீடு

05 Aug, 2023 | 01:53 PM
image

'நடன புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ' வுல்ஃப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ' வுல்ஃப்'. இதில் பிரபுதேவா, ராய் லட்சுமி, வசிஷ்டா என் சிம்ஹா, அனுசுயா பரத்வாஜ், அஞ்சு குரியன், ரமேஷ் திலக், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா, ஸ்ரீ கோபிகா, அவினாஷ், சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்பரீஷ் இசையமைத்திருக்கிறார். 

மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சந்தேஷ் நாகராஜ் தயாரித்து, வெளியிடுகிறார்.

பிரபு தேவாவின் 60ஆவது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில் இளமை ததும்பும் கவர்ச்சியான காட்சிகளும், மிரட்டும் எக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

 இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு,  கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right