பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் கொழும்பு  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகள் இலங்கை வைத்திய சபையில் பதிவு செய்துகொள்ள முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.