அருள் நிதி நடிக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

05 Aug, 2023 | 01:42 PM
image

அருள்நிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

நட்சத்திர இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டிமான்ட்டி காலனி 2'. இதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைட் லைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் விஜய் சுப்பிரமணியன், ஆர். சி. ராஜ்குமார் மற்றும் அஜய் ஞானமுத்து ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் வெளியிடுகிறார்.

இப்படத்தின் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்