பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் ஆரம்பம்

Published By: Vishnu

04 Aug, 2023 | 02:54 PM
image

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் வெள்ளிக்கிழமை (04) காலை ஆரம்பமாகி சிறப்புற இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதம குருவாக திருஞானசம்பந்த குருக்கள், ஆலயபூசகர் சிவபாதன் கணேசபுவன் ஆகியோர்களால் காலை 8 மணியளவில் விஷேட அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து 11.30 மணியளவில் விநாயக பெருமானுக்கும் பரிவார மூர்திகளுக்கும் விஷேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்குதலும், களாஞ்சி பிரசாதம் வழங்குதலும் இடம்பெற்று அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

ஆலய வளாகத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். 

இன்று மாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆலய பூசகரால் பாரம்பரிய முறைப்படி  பூசை வழிபாடுகள் இடம்பெற்று சனிக்கிழமை (5) அதிகாலை 4 மணியளவில் பரிகலம் வழிவிடுதல் நிகழ்வு இடம்பெற்று பொங்கல் உற்சவம் நிறைவுறும்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து சட்ட விரோதமாக பௌத்த விகாரை அமைத்து பல்வேறு நெருக்கடிகள் வழங்கப்பட்டு வந்திருந்தது. தற்போது குறித்த ஆலயத்தின் வழிபாடுகள் தொடர்ச்சியாக ஆலய நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09