இந்திய அளவில் புதுமுக நடிகராக அறிமுகமாகும் விக்ராந்த் நடிப்பில் உருவாகும் 'ஸ்பார்க் லைஃப்' எனும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய திரையுலகிற்கு ஏராளமான சாதனைகளையும், புதுமுக நட்சத்திரங்களையும் உருவாக்கி வழங்கி வரும் தெலுங்கு திரையுலகிலிருந்து புதிய வரவாக அறிமுகமாகுபவர் நடிகர் விக்ராந்த்.
இவர் நடிப்பில் தயாராகும் 'ஸ்பார்க் லைஃப்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் இயக்கி தயாரித்து வழங்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், மெஹ்ரீன் பிர்ஸாதா, ருக்ஷார் தில்லான், குரு சோமசுந்தரம், நாசர், வெண்ணலா கிஷோர், சுகாசினி மணிரத்னம், பிரம்மா ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஏ. ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லீலா ரெட்டி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் எக்சன் காட்சிகள் பிரமிக்கத்தக்க அளவில் இடம்பெற்றிருப்பதால் பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM