சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜெயிலர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னோட்டம் வெளியிடப்பட்ட குறுகிய கால அவகாசத்திற்குள் ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜெயிலர்'. இதில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெரஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், நாகபாபு, யோகி பாபு, மாரிமுத்து, ரித்விக், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் பத்தாம் திகதி என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் எக்சன் காட்சிகள் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருப்பதாலும், வசனங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டிருப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னோட்டத்திற்கு இணையவாசிகள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM