ஆட்சி மாற்­ற­மா­னது நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் பலப்­ப­டுத்த வேண்டும். ஆனால் இந்த அர­சாங்­கத்தில் நல்­லி­ணக்கம் பலப்­ப­ட­வில்லை என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் இணைத்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். தனிப்­பட்ட எந்த நோக்­கத்­திற்­கா­கவும் மஹிந்­தவை வீழ்த்­த­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம் நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்த வில்லை என்ற குற்­றச்­சாட்­டினை எதிர்த்­த­ரப்பு முன்­வைத்து

வரும் நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் குறிப்­பி­டு­கையில்,

மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்த வேண்டும் என்ற தனிப்­பட்ட நோக்கம் எதுவும் எமக்கு இருக்­க­வில்லை. யுத்­தத்தை வெற்­றி­கொண்ட தலைவர், நாட்டில் அபி­வி­ருத்­தியை பலப்­ப­டுத்­தி­யவர் என்ற நல்ல எண்­ணப்­பாடும் எம்­மத்­தியில் உள்­ளது.

ஆனால் யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் மஹிந்த பய­ணித்த அர­சியல் பயணம் மோச­மா­ன­தாக அமைந்து விட்­டது. சர்­வா­தி­கார ஆட்­சியை தக்க வைக்­கவும், தமது குடும்ப ஆட்­சியை முன்­னெ­டுக்­கவும் அவர் காட்­டிய அக்­க­றையை மக்­களை ஒன்­றி­ணைப்­பதில் காட்ட தவ­றி­விட்டார். பல சந்­தர்ப்­பங்­களில் நாம் அவர் விட்ட தவ­று­களை சுட்டிக் காட்­டினோம். மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் கோரிக்­கையை நாம் முன்­வைத்தோம்.

ஜாதிக ஹெல உறு­மைய கட்சி என்ற ரீதியில் மஹிந்த அர­சாங்­கத்தில் நாம் முக்­கிய பங்கு வகித்தோம். தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக நாம் செயற்­பட்டோம். அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தும் பல்­வேறு செயற்­பா­டுகள் தொடர்பில் நாம் வலி­யு­றுத்தி வந்­துள்ளோம். அந்த ஒரு அக்­க­றையில் தான் கடந்த காலத்தில் மஹிந்த அர­சாங்­கத்தின் மூலம் நாட்­டையும் நாட்டில் ஜன­நா­ய­கத்­தையும் பல­ப­டுத்த வேண்டும் என்ற வகையில் செயற்­பட்டோம்.

எனினும் மஹிந்த ராஜபக் ஷவின் செயற்­பா­டு­களும் ஆட்­சியின் போக்கும் ஜன­நா­ய­கத்தை மீறும் வகையில் அமைந்து விட்­டன. ஆகவே மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டு பொது எதி­ர­ணியின் பக்கம் வந்தோம். மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை வீழ்த்­தி­யாக வேண்டும் என்­ப­தற்­காக அவர்­களை நாம் பழி­வாங்க செயற்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது பொய்­யான கருத்­தாகும். தனிப்­பட்ட ரீதியில் அவ­ருடன் எந்த முரண்­பா­டு­களும் எமக்கு இல்லை.

அதேபோல் இப்­போது அமைந்­துள்ள அர­சாங்கம் நல்­லாட்சி அர­சாங்கம் என்ற சான்­றி­த­ழையும் நான் வழங்க மாட்டேன். இந்த அர­சாங்கம் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யுள்­ளதா என்ற கேள்­விக்கு என்னால் முழு­மை­யான பதிலை வழங்­கவும் முடி­யாது. மாற்றம் ஒன்று வேண்டும் என்ற நிலையில் அந்த ஆட்­சியை விடவும் இப்­போ­துள்ள ஆட்­சி­யா­ளர்கள் ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­டு­கின்­றனர் என்­பது உண்மையாக இருந்தாலும் இந்த மாற்றமும் மக்களை பூரணப்படுத்தவில்லை.

மேலும் ஆட்சி மாற்றம் நாட்டின் நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும். மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.