மாலபே வாவிக்கரை வீதி காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் தொடர்பில் வெளியான தகவல்கள்!

Published By: Digital Desk 3

04 Aug, 2023 | 10:52 AM
image

மாலபே சந்திரிகா குமாரதுங்க மாவத்தையின் வாவிக்கரை வீதியிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் கொத்தொட்டுவ நானாவத்தை பகுதியைச் சேர்ந்த பசிந்து சாமர மதுசங்க (29) என்ற இளைஞனின் சடலம் என குடும்ப உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தக்  கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மிரிஹான விசேட புலனாய்வு அதிகாரிகள் குழு  கைது செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் சுமுதுவின் கொலையுடன் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய  வந்துள்ளது. 

இந்த இளைஞன் வேறொரு பகுதியில் கொல்லப்பட்டு அவரது சடலம்  வாவிக்கரை  வீதிக்கு கொண்டுச் சென்று போடப்பட்டிருக்கலாம்  எனவும் அவரது உடல் முழுவதும் தாக்கப்பட்டதில் பல காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு  அருகில் இரண்டு கைத்தொலைபேசிகளையும் விசாரணைக் குழுவினர்  கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுவலை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடுவலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 19:54:35
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37